பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் ஏன்? கல்வித்துறை அமைச்சர் அவர்கள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Sunday, June 27, 2021

பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் ஏன்? கல்வித்துறை அமைச்சர் அவர்கள்

பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் ஏன்?


பிளஸ் 2 மதிப் பெண் கணக்கீட்டு முறையில் பதி தாம் வகுப்பு மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்தது ஏன் என் பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய் யாமொழி விளக்கமளித்துள்ளார். 

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வி இயக்கக வளா கத்தில் அதிகாரிகளுடன் அவர் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டபின்பு செய்தி யாளர்களிடம் கூறியது: பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கு மொத்தம் 12 கணக்கீட்டு முறைகள் பரிந்துரைக்கப்பட்டன. அது குறித்து விவா தித்து, இரண்டு முறைகளை முதல்வர், தலைமைச் செய வாளர், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் ஆகியோருக்குச் சமர்ப்பித்தோம். 


அதிலிருந்து ஒரு முறையை இறுதி செய்து, அதற்கான அறிவிப்பை வெளி யிட்டுள்ளார். பிளஸ் 2 மாணவர்கள் பெருந்தொற்று இல்லாத காலத் தில் நேரடியாக பள்ளிக்குச் சென்று பாடங்களைப் பயின்று, நேரடியாகத் தேர்வை எழுதிப் பெற்ற மதிப் பெண்கள் அவை. அதனால் மட்டுமே பத்தாம் வகுப்பிலி ருந்து 50 சதவீத மதிப்பெண்கள் பிளஸ் 2 வகுப்பு மதிப் பெண்ணுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. 

தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை அரசின் வழி காட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் கட்டணம் வசூ லிக்கும் தனியார் பள்ளிகளின் மீது கடுமையான நடவ டிக்கை எடுக்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு விலை யில்லா கையடக்க மடிக்கணினி (டேப்லெட் வழங்கு வது குறித்தும், கல்வி தொலைக்காட்சியை 4 சேனல்க ளாக விரிவுபடுத்துவது குறித்தும் ஆலோசனை நடை பெற்று வருகிறது என்றார் அவர்.

No comments:

Post a Comment