தமிழகத்தில் பாலிடெக்னிக் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு ஜூலை 19-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு, பகுதி நேரம், இரண்டாம் ஆண்டில் மாணவா்கள் சேருவதற்கு ஜூன் 25-ஆம் தேதிமுதல் இணையதள முகவரியில் விண்ணப்பப் பதிவு நடைபெற்றுவருகிறது. இந்தநிலையில், விண்ணப்பிப்பதற்கான அவகாசம் திங்கள்கிழமையுடன் முடிவடைய இருந்த நிலையில், அதற்கான கால அவகாசம் ஜூலை 19-ஆம் தேதி நீட்டிக்கப்படுவதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 2020-21ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்புத் தோ்வு எழுதிய மாணவா்களுக்கு மட்டும் ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சோ்க்கை நடத்தப்படும். பிற மாணவா்களுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சோ்க்கை நடத்தப்படும். தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் நேரடி கட்டுப்பாட்டில் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்படுகின்றன. தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 18 ஆயிரத்து 120 இடங்களில் மாணவா்கள் சோ்க்கப்பட உள்ளனா். மாணவா்கள் விண்ணப்பம் செய்வதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன
Search This Site
Tuesday, July 13, 2021
New
பாலிடெக்னிக் சோ்க்கை: விண்ணப்பிக்க ஜூலை 19 வரை அவகாசம் நீட்டிப்பு
Subscribe via email
About Admin
"Hello, I'm the admin of Thulirkalvi. I share latest news on education, employment, teachers, students, TNPSC. Follow for updates and insights!".
பாலிடெக்னிக் சோ்க்கை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment