பொதுமக்கள் இணையதளம் வாயிலாக 1950ம் ஆண்டு முதல் வில்லங்க விவரங்களை பார்க்கும் வசதி: விரைவில் அறிமுகம் என பதிவுத்துறை தகவல் - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, July 9, 2021

பொதுமக்கள் இணையதளம் வாயிலாக 1950ம் ஆண்டு முதல் வில்லங்க விவரங்களை பார்க்கும் வசதி: விரைவில் அறிமுகம் என பதிவுத்துறை தகவல்

பொதுமக்கள் இணையதளம் வாயிலாக கடந்த 1950ம் ஆண்டு முதல் வில்லங்க விவரங்களை பார்க்க வசதி கொண்டு வரும் பதிவுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 


தமிகத்தில் வீடு, மனை விற்பனையின் போது அதை வாங்குவோர், அந்த சொத்து தொடர்பான முந்தைய விவரங்களை அறிய வில்லங்க சான்று பார்ப்பது வழக்கம். இதற்காக, கடந்த காலங்களில் பொதுமக்கள் வில்லங்க சான்று பார்க்க சார்பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் வர வேண்டும். இதற்காக, ஒரு சர்வே எண்ணுக்கு ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தேடும் போது அதற்கேற்ப கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதனால், சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு தினமும் பொதுமக்கள் வில்லஙக விவரம் கேட்டு வந்ததால், கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டது. இப்பிரச்சனைக்கு முடிவு கட்டும் வகையில் கடந்த 2014 முதல் இணையதளம் வாயிலாக வில்லங்க சான்று பார்க்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் 1987ம் ஆண்டு வரை ெசாத்து விவரங்கள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டன. 

இதனால், அந்த விவரங்களை பொதுமக்களால் இணையதளம் வாயிலாக பார்க்க முடிந்தது. ஆனால், இதற்கு முந்தைய விவரங்களை பார்க்க முடியாததால், பத்திரம் பதிவு செய்வதில் சிக்கல் இருந்தது. இதை தொடர்ந்து 1.1.1975ம் ஆண்டு முதல் சொத்து குறித்த விவரங்களை அளித்தால் வில்லங்க விவரங்களை பெறும் வசதி கடந்த 2018 டிசம்பர் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் 1975ம் ஆண்டு வரையிலான வில்லங்கத்தை எளிதாக பார்க்க முடிந்தது. அதே நேரத்தில் வில்லங்க விரவங்களை இலவசமாக தெரிந்து கொள்வதுடன் பிரதியும் எடுத்து கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டது. 

 அதே நேரத்தில் 1975க்கு முன்னர் உள்ள விவரங்களை பார்ப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், இது தொடர்பாக வில்லங்க சான்ற பெற சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக பதிவுத்துறை ஐஜி சிவன் அருளிடம் பொதுமக்கள் பலர் கோரிக்கை வைத்தனர். இதையேற்று, கடந்த 1.1.1950 முதல் 31.12.1974 வரை உள்ள காலத்திற்குரிய சொத்து விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய பதிவுத்துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, பதிவுத்துறை சார்பில் உரிய கருத்துருவினை அரசுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்று பதிவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment