பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி வாட்ஸ்-அப் மூலம் அனுப்ப 31-ந்தேதி கடைசி நாள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, July 28, 2021

பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி வாட்ஸ்-அப் மூலம் அனுப்ப 31-ந்தேதி கடைசி நாள்

கடலூர் அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி வாட்ஸ்-அப் மூலம் அனுப்ப 31-ந்தேதி கடைசி நாள் சுதந்திர தின விழாவையொட்டி கடலூர் அரசு அருங்காட்சியகத்தில் சிறப்பு கட்டுரை போட்டி நடக்கிறது. 


இதில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளலாம்." எனக்கு பிடித்த சுதந்திர போராட்ட வீரர்" என்ற தலைப்பில் கட்டுரையை 3 பக்கங்களுக்கு மிகாமல் எழுத வேண்டும். முதல் பக்கத்தில் மாணவரின் பெயர், வகுப்பு, பள்ளியின் பெயர் ஆகியவற்றை கட்டாயம் குறிப்பிட வேண்டும். தெளிவாக எழுதிய கட்டுரைகளை புகைப்படம் எடுத்து 8610627168 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் அல்லது காப்பாட்சியர், அரசு அருங்காட்சியகம், பழைய மாவட்ட கலெக்டர் அலுவலகம், மஞ்சக்குப்பம், கடலூர் என்ற முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பலாம். கட்டுரையை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதலாம். 

போட்டியில் சிறந்த கட்டுரைகளை வழங்கிய மாணவ-மாணவிகளுக்கு வெற்றியாளர் சான்றிதழ் வழங்கப்படும். கட்டுரைகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் வருகிற 31-ந்தேதி ஆகும். மேலும் விவரங்களுக்கு அரசு அருங்காட்சியகத்தை 8610627168 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் ஜெயரத்னா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment