இலவச எல்.கே.ஜி., 5ல் விண்ணப்ப பதிவு - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, July 3, 2021

இலவச எல்.கே.ஜி., 5ல் விண்ணப்ப பதிவு

தனியார் பள்ளிகளில் கட்டணமின்றி, எட்டாம் வகுப்பு வரை படிப்பதற்கான மாண வர் சேர்க்கை துவங்கியுள்ளது. மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டத்தின் படி, தமிழகத்தில் தனி யார் பள்ளிகளில், 25 சதவீத இடங்களில், பொரு ளாதாரத்தில் நலிந்த பிரிவினரின் குழந்தைகள் சேர்க்கப்படுகின்றனர். 




சிறுபான்மை அந்தஸ்து பெறாத, தனியார் மெட்ரிக், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளியிலும், இந்த திட்டம் அமலில் உள்ளது. அதாவது தனியார் பள்ளிகளில், நுழைவு வகுப்பாக உள்ள எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பில், 25 சதவீத இடங்களில், அரசின் சார்பில் மாணவர்கள் சேர்க்கப்படு கின்றனர். இந்த மாணவர்கள் எட்டாம் வகுப்பு வரை படிப்பதற்கு, அரசின் சார்பில் பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் செலுத்தப்படும். நடப்பு கல்வி ஆண்டுக்கான சேர்க்கை நடவடிக்கைகள் நேற்று துவங்கின. 


பள்ளிகளில் இலவச சேர்க்கைக்கான, 25 சத வீத இடங்களின் பட்டியல், பள்ளி கல்வித் துறை யிடம், நேற்று வழங்கப்பட்டுள்ளது. இந்த பட் டியல், இன்று இணையதளத்தில் வெளியிடப் பட உள்ளது. வரும், 5ம் தேதி முதல் விண்ணப்ப பதிவு துவங்குகிறது. இதையொட்டி, விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களின் விபரங்களை, பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ளது. மாணவர் சேர்க்கை தொடர்பாக, மாவட்ட வாரியாக ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப் பட்டு, அவர்களின் மொபைல் போன் எண்கள், rte.tnschools.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கூடுதல் தகவல் தேவைப்படுவோர், அந்த எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment