பொதுத்துறை வங்கிகளில் கிளார்க் பணிநிலை நியமனத் தேர்வை ஆங்கிலம், இந்தி மொழிகளில் நடத்துவதற்கான அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது.
இந்த தேர்வை அங்கீகரிக்கப்பட்ட பிராந்திய மொழிகளிலும் நடத்த வேண்டும் என்று தென்னிந்திய மாநிலங்கள் உள்ளிட்டவற்றில் இருந்து கோரிக்கை எழுந்தது.
அதைத் தொடர்ந்து, இந்த விஷயம் தொடர்பாக ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது.
அந்த குழு தனது பரிந்துரைகளை 15 நாட்களுக்குள் அளிக்கும். அதன் அடிப்படையில் ஓர் இறுதி முடிவை எடுக்கும் வரை பணிநியமனத் தேர்வுக்கான தற்போதைய ஏற்பாடுகளை வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் நிறுத்திவைக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சகம் நேற்று அறிவுறுத்தியுள்ளது.
உள்ளூர் இளைஞர்களுக்கும் சரிசமமான வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்ற நோக்கில், பிராந்திய ஊரக வங்கிகளில் அலுவலக உதவியாளர் மற்றும் அலுவலர் (ஸ்கேல் 1)-க்கான தேர்வுகள் 13 பிராந்திய மொழிகளிலும் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
அது முதல் இந்த தேர்வுகள் பிராந்திய மொழிகளிலும் நடத்தப்பட்டு வருகின்றன என்று நிதியமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment