கோவை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, தற்காலிக செவிலியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கோவை மாநகராட்சி சார்பில், 32 மகப்பேறு மருத்துவமனைகள் நடத்தப்படுகின்றன. இதில், 20 சுகாதார செவிலியர்கள் பணியிடம் காலியாக இருக்கிறது. மாதம், 11 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில், இப்பணியிடத்துக்கு, தற்காலிகமாக துணை சுகாதார/ நகர சுகாதார செவிலியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் வெளியிட்டுள்ள அறிக்கை:கோவை மாநகராட்சி மருத்துவமனைகளில் காலியாக உள்ள செவிலியர் பணியிடத்துக்கு தொகுப்பூதியத்தில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். குறைந்தபட்சம் பி.எஸ்.சி., நர்சிங், டிப்ளமோ நர்சிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
MUST READ: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு
தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமத்தில் அவசியம் பதிவு செய்திருத்தல் வேண்டும்.டவுன்ஹாலில் உள்ள மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், நாளை காலை, 10:00 மணிக்கு நேர்காணல் நடைபெறும். கல்வி சான்று, இருப்பிட சான்று, ஜாதிச்சான்று, ஆதார் அட்டை அசல் மற்றும் ஒரு நகல் கொண்டு வர வேண்டும்.இவ்வாறு, கமிஷனர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment