பயமுறுத்தும் இந்திய நெடுஞ்சாலைகள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, July 17, 2021

பயமுறுத்தும் இந்திய நெடுஞ்சாலைகள்



வாவ் இந்தியா ‘கரணம் தப்பினால் மரணம்’ என நினைக்க வைக்கும் இந்தியாவின் ஆபத்தான சாலைகள் இவை... ஜோஜி லா கணவாய் சாலை ஏதாவதொரு வளைவில் கண் இமைக்க மறந்தால், 3,538 மீட்டர் பள்ளத்தாக்கில் விழுந்துவிடும் பேராபத்து இருக்கிறது. காஷ்மீரின் லே-லடாக் நகருக்கு ஸ்ரீநகரில் இருந்து செல்லும் பிரதான சாலை இது. கில்லர்- கிஸ்தாவர் சாலை காஷ்மீரையும், இமாச்சல பிரதேசத்தையும் இணைக்கும் இந்தச் சாலை மலையைச் செதுக்கிப் போடப்பட்டது. மொத்தம் 120 கிலோமீட்டர் வரை, ஒரு பக்கம் கற்பனை பண்ணவே முடியாத பள்ளத்தாக்கு பாதை இது. நேரல்-மதேரன் ரோடு மகாராஷ்டிராவின் ராஜ்காட் மாவட்டத்தில் இருக்கும் மதேரன் மலைவாசஸ்தலத்தையும், நேரல் என்ற ஊரையும் இணைக்கும் 8.9 கி.மீ நீளமுள்ள இந்த சாலை மிகமிகக் குறுகிய, அதிக ஆபத்தான வளைவுகளைக் கொண்டது. ஒரே நேரத்தில் எதிரும் புதிருமாக வண்டிகள் வந்தால் ரிவர்ஸில் அரை கிலோமீட்டர் பாம்பைப் போல வளைந்தால் ஒழிய வழி கிடைக்காது. தேசிய நெடுஞ்சாலை 22 நரகத்தின் நெடுஞ்சாலை என்று ஓட்டுநர்களால் அழைக்கப்படும் சாலை இது. சமீபத்தில் இந்தியாவில் பராமரிப்பின்றி உயிருக்கு உலை வைக்கக் காத்திருக்கும் சாலை பட்டியலில் இது முதலிடம் பிடித்திருக்கிறது. சிக்கிம் ஜிக் ஜாக் சாலை சிக்கிம் மாநிலத்தில் கடல் மட்டத்திலிருந்து 11,200 அடி உயரத்தில் இருக்கும் இந்த ஜிக் ஜாக் வடிவச் சாலையை கழுகுப்பார்வையில் இருந்து பார்க்க அழகாக இருக்கும். ஆனால் பயணிக்க, அச்சுறுத்தலாக இருக்கும். இதில் அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்களே, அதிகம் பயணிக்கிறார்கள். நாதுலா கணவாய் சாலை இந்திய-சீன எல்லைச் சா லை இது. கோடைகாலத்தைத் தவிர மற்ற நாட்களில் போனால் பனி பகலிலேயே மூடி, ஓர் அடி கூட எடுத்து வைக்க முடியாத அளவுக்கு சாலையை மறைத்துவிடும். தகுந்த வழிகாட்டி இல்லாமல் இந்தச் சாலையை பற்றி யோசிக்கவே கூடாது. லே-மணாலி சாலை பொறுமையை அசைத்துப் பார்க்கும் மிகக்குறுகலான காஷ்மீர் மலைச்சாலை இது. பல நேரங்களில் இடப்பக்கம், வலப்பக்கம் என மாறி மாறி அதல பாதாள பள்ளத்தாக்கின் முனையில் வழி கொடுத்து முன்னேறிச் செல்ல வேண்டி இருக்கும். அல்லது மணிக்கணக்கில் பனி சூழ்ந்த சாலையில் டிராபிக் நெரிசலில் காத்துக்கிடக்க வேண்டி இருக்கும்.

No comments:

Post a Comment