மின்சார வாரிய அதிகாரிகள், ஊழியர்களுக்கு புதிய காப்பீட்டு திட்டம் - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, July 22, 2021

மின்சார வாரிய அதிகாரிகள், ஊழியர்களுக்கு புதிய காப்பீட்டு திட்டம்

தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு புதிய காப்பீட்டு திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் அதுதொடர்பான வழிகாட்டுதல்களை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. புதிய காப்பீட்டு திட்டம் அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் கடந்த 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில், தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான வழிகாட்டுதல்களை மின்சார வாரியம் வெளியிட்டு உள்ளது. 

அதன்படி மின்சார வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீட்டு தொகை மூலம் சிகிச்சை பெறும் வகையில் புதிய காப்பீட்டு திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின்கீழ் புதிய வகை சிகிச்சைகள், அறுவைசிகிச்சைகள் தேவைப்படுவோர் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை காப்பீட்டு தொகை மூலம் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். 

இதற்காக ஒவ்வொருவரிடம் இருந்தும் மாதந்தோறும் ரூ.300 பிடித்தம் செய்யப்படும். இந்த காப்பீட்டு திட்டம் ஒப்பந்த ஊழியர்களுக்கு பொருந்தாது. 203 வகை சிகிச்சை இந்த காப்பீட்டு திட்டத்தில் இணைந்துள்ள ஆயிரத்து 169 ஆஸ்பத்திரிகளில் 203 வகையான சிகிச்சைகளுக்கு காப்பீட்டு தொகை அனுமதிக்கப்படும். காப்பீட்டு திட்டத்தில் இல்லாத ஆஸ்பத்திரிகளில் ஏதேனும் அவசரத்தின் அடிப்படையில் சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் அதற்கான தொகை பின்னர் வழங்கப்படும். 

 இந்த புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்காக தமிழக அரசு, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் 4 ஆண்டு கால ஒப்பந்தம் செய்து உள்ளது. அதாவது வருகிற 2025-ம் ஆண்டு ஜூன் 30-ந் தேதி வரை 4 ஆண்டு காலத்துக்கு புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் அமலில் இருக்கும். இவ்வாறு வழிகாட்டுதலில் மின்சார வாரியம் தெரிவித்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். SOURCE NEWS

No comments:

Post a Comment