செய்தி வெளியீடு எண்:402
நாள்:08.07.2021
செய்தி வெளியீடு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்களை
விரைந்து நிரப்பிடவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான
கல்வி உதவித் தொகைகளை உரிய காலத்தில் வழங்கிடவும்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆய்வுக் கூட்டத்தில்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவுரை
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார
மேம்பாட்டிற்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம்
செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும், அடுத்த
10 ஆண்டுகளுக்கான இத்துறையின் தொலைநோக்குத் திட்டங்கள் குறித்தும்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று
(8.7.2021) தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில், பல்வேறு
அரசுத்துறைகளில், ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்களைக் கண்டறிந்து, விரைந்து
நிரப்பிட வேண்டும் என்றும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின
மாணவர்களுக்கான Post Matric மற்றும் Pre Matric கல்வி உதவித்தொகை,
உயர்கல்வி சிறப்பு உதவித்தொகை, முனைவர் பட்டப் படிப்பிற்கான ஊக்கத்தொகை
ஆகிய கல்வி உதவித்தொகைத் திட்டங்களை எவ்விதத் தொய்வுமின்றி உரிய
காலத்தில் மாணவர்களுக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும்
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.
மேலும், வெளிநாடுகளில்
சென்று முதுகலை, ஆராய்ச்சிப் படிப்புப் பயிலும் மாணவர்களுக்கான கல்வி
உதவித்தொகைத் திட்டத்தினைச் சீரமைத்திட உரிய நடவடிக்கைகளை விரைந்து
மேற்கொள்வது குறித்தும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுரை
வழங்கினார்.
No comments:
Post a Comment