திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மக்களின் நலனை பேணுவதற்காக மாவட்ட அளவிலான ஆதிதிராவிடர் நலக்குழு, மாவட்ட விழிக்கண் மற்றும் கண்காணிப்புக்குழு (வன்கொடுமை தடுப்புச்சட்டம்), மாவட்ட விழிக்கண்குழு (துப்புரவு பணியாளர்கள் நலன்) ஆகிய குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
இக்குழுக்களின் பதவிக்காலம் முடிவுற்றதால் இக்குழுக்கள் தற்போது திருத்தியமைக்கப்பட உள்ளதால், மேற்படி குழுக்களில் அலுவல் சாரா உறுப்பினர்கள் தேர்வு செய்யும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த சமூக சேவகர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
எனவே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மக்களின் வளர்ச்சிக்காக பாடுபடும் விருப்பமுள்ள சமூக சேவகர்கள் தங்களது சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலரிடம் வருகிற 15-ந் தேதிக்குள் (வியாழக்கிழமை) நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.
மேற்கண்ட தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment