திருச்சி அரசு இசைப்பள்ளியில் நிகழாண்டுக்கான
மாணவர் சேர்க்கையில் தகுதியானோர் சேர்ந்து பயன்பெறலாம்.
இதுகுறித்து என ஆட்சியர் சு. சிவராசு வெளியிட்ட செய்திக்
குறிப்பு: தமிழக அரசின் கலைப் பண்பாட்டுத் துறை மூலம் 1997
ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியில் தொடங்கப்பட்ட
மாவட்ட அரசு இசைப் பள்ளியில் குரலிசை, நாகசுரம், தவில், தேவா
ரம், பரதம், வயலின், மிருதங்கம் ஆகியவை கற்றுத் தரப்படுகின்றன.
இப் பள்ளியில் சேர 12 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
மூன்றாண்டு பயில வேண்டும். பரதப் பயிற்சிக்கு 7ஆம் வகுப்பு
தேர்ச்சி வேண்டும். கட்டணமாக ஆண்டுக்கு ரூ.152 வசூலிக்கப்ப
டும். 2021-22ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை வரும் 5ஆம்
தேதி முதல் தொடங்குகிறது. இந்தப் பள்ளியில் சேருவோருக்கு தமி
ழக அரசு அறிவித்துள்ள இலவசப் பேருந்து வசதி, ரயில் கட்டணச்
சலுகை, தங்கும் விடுதி, மாதந்தோறும் ரூ. 400 ஊக்கத்தொகை, இல
வச சீருடை, மிதிவண்டி, காலணி ஆகியவற்றையும் விதிகளுக்குள்
பட்டு பெற்றுக் கொள்ளலாம்.
3 ஆண்டு பயிற்சி முடிப்போருக்கு
தமிழக அரசின் தேர்வு இயக்ககத்தால் தேர்வு நடத்தப்பட்டு, சான்றி
தழ் வழங்கப்படும்.
இச் சான்றிதழ்களை வேலைவாய்ப்பகத்தில் பதிந்து பணிமூப்பு
அடிப்படையில் இசைப் பள்ளிகளிலும், இந்து சமய அறநிலையத்
துறைக்குள்பட்ட கோயில்களிலும் வேலைவாய்ப்பு பெறலாம்.
மேலும், விவரங்களுக்கு அரசு இசைப்பள்ளி, ஸ்ரீரங்கம், மேலூர்
சாலை, மூலத்தோப்பு என்ற முகவரியிலும், 0431-2962942 என்ற எண்
ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment