விரைவாக வீட்டைச் சுத்தப்படுத்த டிப்ஸ் - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, July 12, 2021

விரைவாக வீட்டைச் சுத்தப்படுத்த டிப்ஸ்


வாழும் இடத்தை அழகாக வைத்துக்கொள் ளவே அனைவருக்கும் ஆசை. ஆனால், அதைச் செய்வதில்தான் நமக்குள் ஆயிரம் யோசனை கள். காரணம், தனியொரு மனுஷியாக எவ்வளவு வேலைகள்தான் செய்வது என்ற அலுப்பு. இதிலிருந்து நீங்கள் விடுபட, விடுமுறை நாட்களில் சக உறவு களையும் உங்கள் பணியில் சேர்த்துக்கொள்ளுங்கள். கிண்டல் கேலியுடன், ஆடிப் பாடி வேலை செய்தால் அலுப்பும் தெரியாது, வீடும் அழகு பெறும்! 

வீட்டைச் சுத்தம் செய்ய எண்ணியதும் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது, யார் யார் எந்தெந்த அறைகளை சுத்தம் செய்வது எனப் பிரித்துக் கொள்வதுதான். இறுதியில் யாருடைய அறை மிகவும் அழகாக இருக்கிறதோ, அவர் களுக்கு பரிசு வழங்கப்படும் உங்களுக்குள்ளேயே ஒரு போட்டியை வைத்துக் கொள்ளுங்கள். பிறகு பாருங் கள் வேலையின் வேகத்தை ! எந்தெந்த அறைகளை எப்படியெல்லாம் சுத்தம் செய்வது என்று பார்ப்போமா..! 

முழுமையாக தூசு நீக்குதல்: சுத்தம் செய்வதில் முதலில் கவனிக்க வேண்டியது தூசு, சிலந்தி வலை, பூச்சிகளின் எச்சம் போன்றவற்றைத் தான். அலமாரி, வீட்டின் உபகரணங்கள் என, அனைத்து பகுதிகளையும் நன்கு சுத்தம் செய்ய வேண்டும். வறண்ட தூசுகளை துணிகளைக் கொண்டு நீக்கும் முன் முகக்கவசம் அணிந்து கொள்வது நல்லது. கண்ணுக்குத் தெரியும் பகுதிகளை மட்டும் சுத்தம் செய்யாமல், மூலை முடுக்குகளிலும் முறை யாகச் சுத்தம் செய்ய வேண்டும். அப்போதுதான் உள்ளறை அழகு பெறும்! உறைகளை அகற்றுதல்: தூசு மற்றும் ஒட்டடை அடித்த பிறகே தலையணை, என படுக்கை விரிப்பு, சாப்பாட்டு மேசை விரிப்பு, அலமாரி களில் உள்ள விரிப்புகள், இருக்கை உறைகள் என அனைத்தையும் அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். 

இவற்றை சோப்பு நீரில் ஊறவைத்து துவைத்து சுத்தம் செய்து உலர்த்திப் பாருங்கள். உறைகள் பளிச்சென மிளிரும்! கண்ணாடி சுத்தம்: டி.வி, ஃப்ரிட்ஜ், கணினியின் திரை ஆகியவற்றை லேசான அடர்த்தி கொண்ட திரவங்கள் மூலம் சுத்தம் செய்யலாம். கண்ணாடி, சுவர் கடிகாரம் போன்றவற்றை உலர்ந்த துணியால் ஒரு முறை சுத்தம் செய்துவிட்டு, பிறகு ஈரத்துணியால் துடைக்க வேண்டும். உலர்ந்த துணி யைக்கொண்டு மீண்டும் துடைக்கும் போது உங்களின் அழகு முகம் அதில் ஜொலிப்பதை நீங்களே காணலாம். 

குளியலறை, கழிவறை, படுக்கை யறை சுத்தம்; எந்த ஒரு வீட்டிலும் குளியலறை, கழிவறை, படுக்கையறை இவை மூன்றும் ஈரத்தன்மை இல்லாமல் உலர்ந்து இருக்க வேண்டும். அப்போதுதான் அறைகளில் கசடுகள் சேராமல், எப்போதும் கலர்ஃபுல்லாகக் காட்சியளிக்கும். குளிய லறையில் இருக்கும் அலமாரி, கழிவறை, குளியல் டப், பக்கெட் என அனைத்தையும் அவ்வப்போது தேய்த்து சுத்தம் செய்வது நல்லது. 

அதேபோல் கதவு, டைல்ஸ் என அனைத்தையும் வாசனை திரவியம் கொண்டு மாதம் ஒருமுறை சுத்தம் செய்தால் அறை மணக்கும். வீட்டு சுத்தம் என்பது நம் ஆரோக்கியத்துக்கு முக்கிய மானது. அதை தனியாக செய்யாமல், விடுமுறை நாட் களில் அனைவரும் இணைந்து செய்யும் போது, மனை அழகு பெறுவதுடன் மனங்களிடையே மகிழ்ச்சியும்

No comments:

Post a Comment