பேரிடர் நேரத்தில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு
விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு
புது தில்லி, ஜூலை 2:
பேரிடர் சமயத்தில் சிறப்பாக செயல்பட்டவர்
களுக்கு ‘சுபாஷ் சந்திரபோஸ் ஆப்த பிரபந்தன்-2022 விருது வழங்கி
கௌரவிப்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சகம் விண்ணப்பங்களை
வரவேற்றுள்ளது.
விருது பெறுவோருக்கு சான்றிதழும், தனி நபராக இருந்தால் ரூ.5 லட்
சமும், அமைப்பாக இருந்தால் ரூ.51 லட்சமும் வழங்கப்படும்.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்
பாளர் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதி
வில் கூறியிருப்பதாவது:
பேரிடர் நேரத்தில் சிறப்பாக செயல்பட்டவர்
களுக்கு ‘சுபாஷ் சந்திரபோஸ் ஆப்த பிரபந்தன்-2022' விருது வழங்குவ
தற்காக, மத்திய அரசு விண்ணப்பங்களை வரவேற்கத் தொடங்கியுள்
ளது. விருது பெற விரும்புவோர், வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை
www.dmawards.ndma.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்
பிக்கலாம்.
பேரிடர் சமயத்தில் மக்களை மீட்பது, முன்னெச்சரிக்கை ஏற்
பாடுகள் மேற்கொள்வது, முன்னெச்சரிக்கை தொடர்பான புத்தாக்க
கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்வது போன்றவற்
றில் சிறப்பாக செயல்பட்ட தனிநபராக இருந்தாலும் அல்லது அமைப்
பாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம் என்று அந்த சுட்டுரைப் பக்கத்
தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், நேதாஜி சுபாஷ் சந்திரபோ
ஸின் பிறந்த நாளான ஜனவரி 23-ஆம் தேதி அறிவிக்கப்படுவார்கள்.
No comments:
Post a Comment