வங்கிக் கணக்கு முடக்கம் என்று குறிப்பிட்டு வரும் குறுஞ்செய்தியில் உள்ள ‘லிங்க்’கிற்குள் செல்ல வேண்டாம் என சென்னை காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: பொதுமக்களுக்கு வங்கிகளில் இருந்து வருவது போல, ஒரு குறுஞ்செய்தி வருகிறது.
பொதுமக்கள் இதை உண்மையென்று நம்பி ஆராயாமல் அதிலுள்ள ‘லிங்’கிற்குள் சென்று விடுகின்றனா்.
உள்ளே சென்றதில் இருந்து பத்து நிமிஷத்துக்குள் இணைய வழி பணப் பரிவா்த்தனை மூலமாக பொருள்களை வாங்குவது, பற்று அட்டை (டெபிட் காா்டு) மூலம் பணம் எடுப்பது ஆகியவை நடைபெறுகின்றன. இதனால் பலா் பாதிக்கப்பட்டு புகாரளித்து வருகின்றனா்.
எனவே, பொதுமக்கள் விழிப்புடன் இருந்து வங்கியில் இருந்து வருவது போல், லிங்க் எதுவும் செல்லிடப்பேசி எண்ணுக்கு வந்தால், உள்ளே செல்வதை அறவே தவிா்க்கவும்.
இவ்வாறு, ‘இதை உடனடியாகச் செய்யாவிடில் உங்களது கணக்கு முடக்கப்படும்’ என்று வரும் செய்திகளை நம்ப வேண்டாம். சந்தேகம் வந்தால் உங்கள் வங்கிக்குச் சென்று விசாரிக்கவும்.
No comments:
Post a Comment