உலகநாடுகள் அனைத்திலும் மக்கள் தொகை கணக்கிடப்படும் வழக்கம் உள்ளது. இது எங்கு, எப்போது தொடங்கியது என்பதை கூறுவது கடினம். மக்கள் பெரிய சமுதாயமாக எப்போதில் இருந்து கூடி வாழ தொடங்கினார்களோ, அன்றில் இருந்தே மக்கள் தொகை கணக்கெடுப்பும் வழக்கத்தில் வந்துவிட்டது. கி.மு. 4000-ம் ஆண்டில் உலக மக்கள் தொகை 8½ கோடியாக இருந்தது என ஒரு தகவல் கூறுகிறது.
இதனால் அந்த காலத்திலே மக்கள் தொகை கணக்கெடுப்பு வழக்கத்தில் இருந்தது என்பதும் தெரிய வருகிறது.
மக்கள் தொகையை எதற்காக கணக்கிட்டார்கள் என்றால் பழங்காலத்தில் எத்தனை பேரை போருக்கு அனுப்பலாம் என்பதை அறிந்து கொள்வதற்காக அக்கால அரசர்கள் மக்கள் தொகையை கணக்கிட்டனர். வரிவசூல் செய்வதற்கும் இது பயன்பட்டது. ஒருவருக்கு இவ்வளவு வரி என்று விதித்தால் அரசுக்கு எவ்வளவு வருமானம் வரும் என்பதை அறிவதற்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு மிகவும் அவசியமாக இருந்தது.
முற்காலத்தில் இந்த 2 காரணங்களுக்காகவே மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்டன.
இன்று இத்தகைய கணக்கெடுப்புகள் பலவிதங்களில் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த கணக்கெடுப்பினால் மக்களை பற்றியும், பல்வேறு தொழில்களைச் செய்வோரை பற்றியும் சரியான புள்ளி விவரம் அரசுக்கு தெரிய வருகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் பிற திட்டங்களைத் தீட்டவும், அவற்றை நடைமுறைக்கு கொண்டு வரவும் சாத்தியமாகிறது. இந்த கணக்கெடுப்பினால் மக்கள் தொகை பெருகுகிறதா அல்லது குறைகிறதா என்பதும் தெரிய வருகிறது.
ALSO READ: WANTED | SENIOR ENGINEERS | SITE ENGINEERS | QUANTITY SURVEYOR | STORE MANAGER | STORE KEEPER
இதற்கு ஏற்ப வருங்காலத்தில் மக்களது தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் திட்டங்களை வகுக்கவும் உதவியாக இருக்கிறது. இதனால் நகரங்களிலும் கிராமங்களிலும் வாழும் மக்கள் விகிதத்தை அறிந்து கொள்ளலாம். மக்கள் தொகையின் அடிப்படையில்தான் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படுகிறது. தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இவை தவிர சட்டம்-ஒழுங்கு மற்றும் சமூக, பொருளாதார சீர்திருத்தங்களுக்கும் இந்த கணக்கெடுப்பு வழிகாட்டுகிறது. நமது நாட்டில் முதன் முதலாக 1872-ல் மக்கள்தொகை கணக்கெடுக்கப்பட்டது. அப்போதில் இருந்து 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
No comments:
Post a Comment