மூன்றாண்டு 'டிப்ளமோ' படிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, July 9, 2021

மூன்றாண்டு 'டிப்ளமோ' படிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு

:கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரியில் மூன்றாண்டு டிப்ளமோ படிப்புக்கான சேர்க்கைக்கு இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.காந்திபுரத்தில் அமைந்துள்ள இக்கல்லுாரியில், அமைப்பியல், இயந்திரவியல், மின்னியல், தொடர்பியல், கருவி மட்டும் கட்டுப்பாடியல், கணிப்பொறியியல், கார்மென்ட் டெக்னாலஜி, மற்றும் வணிகவியல் துறைகளில் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையவழியில் பெறப்பட்டு வருகின்றன.




ஓராண்டுக்கான கல்விக்கட்டணம், 2,452 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆர்வமுள்ள மாணவிகள், www.tngptc.com என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.இணையவழி வசதி இல்லாதவர்கள், கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையத்தில், இணையவழியில், வரும், 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.எஸ்.சி., எஸ்.டி., தவிர, இதர பிரிவினர், பதிவு கட்டணமாக, 150 ரூபாய் செலுத்தவேண்டும். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ், 25 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு டிப்ளமோ படிப்புக்கான விடுதியுடன், இலவச கல்வியும் அளிக்கப்படுகிறது.



மாணவிகள் பத்தாம் வகுப்பில் பெற்ற மொத்த மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, இன சுழற்சி அடிப்படையில் கலந்தாய்வு வாயிலாக சேர்க்கப்படுவர். நடப்பாண்டில் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு, ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். வரும், 12ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டுமென, கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment