பொறியியல் துறையிலேயே மிகவும் பழமையான அதே சமயம் ஒரு பரந்தபுலங்கள் கொண்ட பொறியியல் துறை என்று இயந்திரப் பொறியியலை சொல்லலாம்.
புதிய பேட்டரிகள், தடகள உபகரணங்கள் முதல் மருத்துவ சாதனங்கள் மற்றும் தனிப்பட்ட கணினிகள், ஏர் கண்டிஷனர்கள், தானியங்கி இயந்திரங்கள் முதல் மின்சார மின் நிலையங்கள் வரை அனைத்தையும் வடிவமைப்பவர்கள் இயந்திரப் பொறியாளர்களாகத்தான் இருப்பார்கள்.
கல்வித்தகுதி:-
பனிரெண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப் பாடங்களைப் படித்து நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் இளங்கலை பி.இ / பி.டெக் இயந்திரப் பொறியியல் படிப்பில் இணைந்து படிக்கலாம். இந்தியத் தொழில் நுட்பக் கல்லூரிகளில் இப்பொறியியல் படிப்பில் சேருவதற்கு ஜேஇஇ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். இது நான்கு ஆண்டுகால பட்டப்படிப்பாகும்.
இப்பொறியியல் துறையிலேயே முதுகலை பட்டப்படிப்பில் இணைவதற்கு இளங்கலை பட்டப்படிப்பான பி.இ / பி.டெக் இத்துறை பட்டப்படிப்பு அல்லது அதற்கு சமமான வேறுதுறை பொறியியல் படிப்பை முடித்திருக்க வேண்டும். இது இரண்டு ஆண்டுகால பட்டப்படிப்பாகும்.
இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களில் இருக்கும் பல்வேறு இயந்திரப் பொறியியல் படிப்புகள்:-
இளங்கலை படிப்புகள்:-
இளங்கலை இயந்திரப் பொறியியல் (பி.இ) இளங்கலை இயந்திரப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் (பி.டெக்)
இளங்கலை இயந்திரம் மற்றும் ஆட்டோமேஷன் பொறியியல் (பி.டெக்) இளங்கலை மெக்கட்ராணிக்ஸ் பொறியியல் (பி.டெக்)
முதுகலை படிப்புகள்:-
முதுகலை இயந்திரப் பொறியியல் (பி.இ)
முதுகலை கருவி வடிவமைப்பு பொறியியல் (டூல் இன்ஜினியரிங்) (எம்.இ)
முதுகலை இயந்திரப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் (எம்.டெக்)
இயந்திரப் பொறியியல் தத்துவ டாக்டர் படிப்பு (பி.ஹெச்டி)
கல்லூரிகள்:-
ஐஐடி - இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இருக்கும் இந்தி தொழில்நுட்பக் கல்லூரிகள்
என்ஐடி-இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இருக்கும் தேசிய தொழில்நுட்பக் கல்லூரிகள்
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரப்பிரதேசம், கொல்கத்தா, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களின் பல்வேறு நகரங்களில் உள்ள சிறந்த கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் இத்துறை பொறியியல் படிப்பானது சிறப்பாக வழங்கப்படுகிறது.
வேலை வாய்ப்புகள்:-
தயாரிப்பு வடிவமைப்புத்துறை - உயிர் மருத்துவச் சாதனங்கள் முதல் உள் எரிப்பு இயந்திரங்கள் வரை எரிபொருள் திறன் கொண்ட மோட்டார் வாகனங்கள், மோட்டார்கள் மற்றும் உபகரணங்கள் வரை அனைத்துத் தயாரிப்புகளை வடிவமைத்தல்.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை - சமூகத்தின் கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் புதிய யோசனைகள் மற்றும் தீர்வுகளை ஆராய்ச்சி செய்தல் அல்லது பழைய யோசனைகள் மற்றும் தீர்வுகளை மேம்படுத்துதல் அல்லது விரிவுபடுத்துதல்.
உற்பத்தித்துறை:-
நுகர்வோர் தயாரிப்புகளை பெருமளவில் உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் மற்றும் இயக்க செயல்திறனை மேம்படுத்தும் இயந்திரங்களை வடிவமைத்து உருவாக்குவது. கணினி மேலாண்மைத்துறை - உற்பத்தி வசதி அல்லது மின் உற்பத்தி நிலையம் போன்ற ஒரு பெரிய அமைப்பின் செயல்பாடுகளை நிர்வகித்தல்.
ஆற்றல்துறை:-
இயற்கை எரிவாயு எண்ணெய் மற்றும் மாற்று ஆற்றல் போன்ற மின்சக்தியை உற்பத்தி செய்து வழங்குதல். தொழில்களில் ஆற்றல் எவ்வாறு உருவாக்கப்படுகிறது, சேமிக்கப்படுகிறது மற்றும் நகர்த்தப்படுகிறது என்பதைத் திட்டமிடுதல்.
சம்பளம்:-
இத்துறை வேலையில் புதியதாக நுழைபவர் ஆண்டிற்கு மூன்று முதல் ஐந்து லட்சங்கள் வரை சம்ளத் தொகுப்பை எதிர் பார்க்கலாம். அதே நேரத்தில் ஐந்து முதல் ஆறு ஆண்டுகள் வரை அனுபவம் கொண்ட இயந்திரப் பொறியாளர் எட்டு லட்சங்கள் வரை ஊதியத்தைப் பெறுகிறார்.
அரசாங்க நிறுவனங்களைப் போலவே தனியார் நிறுவனங்களும் இத்துறை பணியாளர்களின் செயல்திறன், புத்திக்கூர்மை மற்றும் அனுபவம் இவற்றைக் கருத்தில் கொண்டு கெளரவமான ஊதியத்துடன் நல்ல சலுகைகளையும் வழங்குகின்றன.
No comments:
Post a Comment