பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களின் செயல்முறைகள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Sunday, July 4, 2021

பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களின் செயல்முறைகள்

021-22 ஆம் கல்வியாண்டிற்கு 1-7 வகுப்புகளுக்கான இரண்டாம் பருவ பாடப்புத்தகம் தேவைப்பட்டியல் கோரி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!!! 

அனுப்புநர் 
திரு.க.நந்தகுமார், இ.ஆ.ப., 
ஆணையர், பள்ளிக் கல்வி ஆணையர் அலுவலகம், 
சென்னை-06. 

பெறுநர் 

மாநிலதிட்ட இயக்குநர், 
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, 
பள்ளிக் கல்வி ஆணையகவளாகம், 
சென்னை-06. 

ந.க.எண். 30821/இ/இ3/2021, நாள். 25.06.2021 

அய்யா, 

பொருள்: 

பள்ளிக் கல்வி - கல்வியியல் மேலாண்மை தகவல் முறைமை (EMIS) தரவுகள் புதுப்பித்து கோருதல்-சார்பு. 

பார்வை: 1. சென்னை-06, பள்ளிக் கல்வி ஆணையரின் கடிதம் ந.க.எண்.110/02/2021, நாள். 15.02.2021 மற்றும் நக.எண். 28302/எப்2/2021, நாள்.10.06.2021 2. சென்னை-06, 

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் மற்றும் பணிகள் கழக உறுப்பினர் செயலரின் கடிதம் ந.க.எண்.4789/விபி/2021,நாள்.21.06.2021 

பார்வையில் கண்டுள்ள பள்ளிக் கல்வி ஆணையரின் கடிதங்களில் பள்ளிக் கல்வித் துறை சார்பான தரவுகள் (அனைத்து வகை பள்ளி மேலாண்மை, மாணாக்கர்கள் ஆசிரியர்கள்/ அலுவலர்கள் எண்ணிக்கை மற்றும் நலத்திட்டத்தில் கல்வியியல் உபகரணங்கள் முதலியன) கல்வியியல் மேலாண்மை தகவல் முறைமை (EMIS) மூலம் அனைத்து மாவட்டங்களிலும் உடனுக்குடன் புதுப்பிக்கப்பட(Current Updation) வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதனடிப்படையில், இனிவரும் காலங்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் மேற்குறிப்பிட்ட விவரங்கள் நேரடியாக கோரப்படுவதை கைவிட்டு கல்வியியல் மேலாண்மை தகவல் முறைமை மூலம் மட்டுமே தரவுகள் பெற்று பயன்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. : 

எனவே, பள்ளிக் கல்வி ஆணையர் அலுவலகம் சார்பாக பார்வை-2 ன்படி தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் மற்றும் பணிகள் கழகத்திற்கு 2021-2022 ஆம் கல்வியாண்டு 1 முதல் 7 ஆம் வகுப்பு வரையிலான இரண்டாம் பருவம் பாடப்புத்தகம் சார்பாக குறிப்பிட்ட மாதிரி படிவத்தின் படி தரவுகள் பெற்று தர கேட்டுக்கொள்கிறேன். 

1. மாநில அளவில் 2021-2022-ஆம் கல்வியாடிற்கான 1 முதல் 7ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் பாடப்புத்தகம் தேவை (படிவம் இணைக்கப்பட்டுள்ளது) 

இணைப்பு 

உரிய மாதிரி படிவங்கள் பள்ளிக்கல்வி ஆணையருக்காக 
நகல் & அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் (உரிய தொடர் நடவடிக்கைக்காக) 







No comments:

Post a Comment