கவழிக் குறைபாடு,
ண்களில் பார்வைத்திறன் குறைவதற்கு மரபு
ஊட்டச்சத்துக் குறைபாடு
போன்ற பல காரணங்கள் உள்ளன. தற்போது
அவற்றை விட முக்கிய காரணமாக இருப்பது
கணினி, ஸ்மார்ட்போன் போன்ற டிஜிட்டல் சாதனங்
களில் தொடர்ந்து மூழ்கி இருப்பதாகும்.
ஊரடங்கு காலத்தில், வீட்டிலிருந்தே வேலை,
படிப்பு என்று பெரியவர்களும், குழந்தைகளும் அதிக
வெளிச்சம் கொண்ட டிஜிட்டல்
திரைகளைத் தொடர்ந்து பார்த்துக்
கொண்டிருக்கிறோம். இவற்றால்
விழித்திரை பாதிக்கப்படலாம்.
விழி
நீர்ப்படலம் உலர்ந்து விடுவதால்
கண்கள் காய்ந்துப் போய் உறுத்தல் ஏற்படும். ஒரு சிலருக்கு தலை
வலி, கண் எரிச்சல் ஏற்படும். உறுத்
தல் ஏற்படும்போது, கண்களைக்
கசக்குவது
மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
டிஜிட்டல் திரைகளைத் தொடர்ந்து பார்ப்பவர்கள்,
அவ்வப்போது கண்களுக்கு ஒரு சில பயிற்சிகளை
செய்ய வேண்டும்.இவ்வாறு செய்வதால் பார்வைத்
திறன் பிரச்சினைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள
லாம். அவை குறித்து இங்கே பார்ப்போம்.
கண்களை இமைக்காமல் இருப்பது விழித்திரை
உலர்ந்து விடுவதற்கு முக்கிய காரணமாகும். விழித்
திரையை ஈரப்படுத்த கண்களை அடிக்கடி இமைக்க
வேண்டும்.
அதிக வெளிச்சம் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்
தும். கணினித் திரைகளின் வெளிச்சத்தைக் குறைக்
கும் ஸ்கிரீன்கள் கிடைக்கின்றன. அவற்றை வாங்கிப்
பயன்படுத்தலாம். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை, கண்களை
மூடியபடி மூன்று நிமிடங்கள் அமைதியாக இருக்க
வேண்டும்.
ALSO READ: TNPSC | GROUP 2 | SYLLABUS
அப்போது கண்களைப் பாதித்த அதிகப்படியான வெளிச்சம் குறைவதால், விழிகள் இயல்பான நிலைக்குத் திரும்பும்.
இருபது நிமிடத்துக்கு ஒரு முறை, இருபது அடி
தூரத்தில் இருக்கும் பொருளை, தொடர்ந்து இருபது
நொடிகள் உற்று நோக்க வேண்டும். பசுமையான
காட்சிகளை அடிக்கடி பார்ப்பது
கண்களுக்கும், மனதுக்கும் இதமாக
இருக்கும்.
பத்து நிமிடத்திற்கு ஒருமுறை
கட்டாயமாகக் கண்களை மேலிருந்து
கீழாகவும், கீழிருந்து மேலாகவும்
உருட்டலாம். பார்வை சமன்பாட்டுக்கு
இந்தப் பயிற்சி உதவும்.
இரண்டு பென்சில்களை,
கைகளிலும் வைத்துக் கொண்டு,
ஒன்றின் கூர் முனைப்பகுதியை, மற்
றொன்றை நோக்கி நகர்த்தி இணைக்க
வேண்டும். இந்தப் பயிற்சி கவனத்தை ஒருங்
கிணைப்பதுடன், கண்களில் ஏற்படும் அழுத்தத்தைக்
குறைக்கும்.
இரு உள்ளங்கைகளையும் சூடாகும் வரை தேய்த்து,
இரு கண்களையும் மூடி, இமைகளின் மீது முப்பது
நொடிகள் வைக்க வேண்டும். இவ்வாறு ஐந்து முறை
செய்தால், கண் நரம்புகளின் மீது ஏற்படும் அழுத்தம்
குறையும்.
தினமும் இரவு பருத்தி பஞ்சை குளிர்ந்த தண்ணீரில்
நனைத்து, கண்களின் மேல் பத்து நிமிடங்கள்
வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் கண்கள்
குளிர்ச்சி அடையும். கருவளையம் உண்டாகாது.
No comments:
Post a Comment