ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க சேவை கட்டணம் உயர்கிறது - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, July 19, 2021

ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க சேவை கட்டணம் உயர்கிறது

ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க விதிக்கப்படும் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள வங்கி களுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்துள்ள வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்.களில் இருந்து மாதம்தோறும் ஐந்து முறை பணம் எடுக்க கட்டணம் கிடையாது. அதேபோல பிற வங்கி ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுக்க 'மெட்ரோ' நகரங்களில் மாதம் தோறும் மூன்று முறையும் 'மெட்ரோ' அல்லாத நகரங்களில் ஐந்து முறை வரையும் கட்டணம்விதிக்கப்படுவதில்லை. அதற்கு மேல் பணம் எடுக்க ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 20 ரூபாய் சேவை கட்டணமாக வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படுகிறது.இந்த கட்டணத்தை 20 ரூபாயில் இருந்து 21 ரூபாயாக உயர்த்திக் கொள்ள வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இந்த கட்டண உயர்வு 2022 ஜன. 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.மேலும் 'டெபிட்' மற்றும் 'கிரெடிட்' அட்டைகள் பயன்படுத்தி பொருட்கள் வாங்கும்போது விற்பனையாளருக்கு ஒரு பரிவர்த்தனைக்கு 15 ரூபாய் வங்கிக் கட்டணம் விதிக்கப்படுகிறது.இது 'இன்டர் சேஞ்ச்' கட்டணம் என அழைக்கப்படுகிறது. இந்த கட்டணம் அடுத்த மாதம் 1 முதல் 15 ரூபாயில் இருந்து 17 ரூபாயாக உயர்த்தப்படுகிறது

No comments:

Post a Comment