அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் சேருவதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, இன்று துவங்குகிறது.பிளஸ், 2 முடித்த மாணவர்கள், அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், இளநிலை பட்டப்படிப்பில் சேர, ஒவ்வொரு கல்லுாரியிலும் விண்ணப்பம் வழங்கப்படும். கொரோனாவால் கடந்தாண்டு முதல் நேரடி விண்ணப்ப முறை பின்பற்றப்படுவதில்லை. இதற்கு மாற்றாக, 'ஆன்லைன்' விண்ணப்ப முறையை, தமிழக உயர் கல்வித்துறை கடந்தாண்டு அறிமுகம் செய்தது.இதன்படி, இன்று முதல், ஆன்லைனில் விண்ணப்ப பதிவுகள் துவங்குகின்றன.
www.tndceonline.org மற்றும் www.tngasa.in என்ற, இணையதளங்களில், மாணவர்கள், வரும் ஆக., 10 வரை பதிவு செய்யலாம்.பிளஸ் 2, பத்தாம் வகுப்பு சான்றிதழ், குடும்ப ஆண்டு வருமான சான்று, ஜாதிச் சான்று போன்றவற்றை, 25ம் தேதி முதல், ஆகஸ்ட், 5 வரை பதிவு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இது குறித்த சந்தேகம் இருந்தால், 044 - 28260098, 2827 1911 ஆகிய போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கோவை மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் கலைச்செல்வி கூறுகையில், ''கோவை மண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து அரசு, கலை, அறிவியல் கல்லுாரிகளிலும், மாணவர் சேர்க்கை துவங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை, பல்லடம், அவிநாசி, வால்பாறை தொண்டாமுத்துார், ஆகிய இடங்களில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கு, அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு கல்லுாரியிலும், மாணவர் சேர்க்கை சேவை மையம் அமைக்கப்படும். மையத்தில், மூன்று பேர் பணியில் இருப்பர். கொரோனா தொற்றுக்கான அரசின் அனைத்து நெறிமுறைகளும், தவறாமல் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளன,'' என்றார்.
'1,433 மாணவர்களுக்குஅனுமதி அளிக்கப்படும்'கோவை அரசு கலைக்கல்லுாரி முதல்வர் சித்ரா கூறுகையில், ''எங்கள் கல்லுாரியில், 23 இளங்கலை படிப்புகளில் இரு சுழற்சிகளில், 1,433 மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். முன்னுரிமை அடிப்படையில், மாணவர்கள் அதிக துறைகளை தேர்வு செய்ய வேண்டும். மாற்றுச்சான்றிதழ், 10 மற்றும், பிளஸ் 2 மதிப்பெண், ஜாதி, சிறப்பு ஒதுக்கீடு உள்ளிட்ட சான்றிதழ்கள், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உள்ளிட்ட, அனைத்து ஆவணங்களையும் வைத்திருக்க வேண்டும்,'' என்றார்.
No comments:
Post a Comment