மாறிவரும் வாழ்க்கை முறைகள், பொருளாதார
நெருக்கடி, நேரமின்மை போன்ற காரணங்
களால் பல பெற்றோர்கள், 'நாம் இருவர், நமக்கு
ஒருவர்' என்று ஒரு குழந்தையோடு நிறுத்திக் கொள்
கின்றனர். இரண்டு, மூன்று குழந்தைகளைப் பெற்று
வளர்ப்பதைக் காட்டிலும், ஒற்றைக் குழந்தையை
வளர்ப்பதில் பல்வேறு சிரமங்கள் இருக்கின்றன. ஒரு
சில விஷயங்களை கவனத்தில் கொண்டு வழி நடத்தி
னால், சிரமங்களைத் தவிர்த்து மகிழ்ச்சியாக வாழலாம்.
அதற்கான ஆலோசனைகளை இங்கு பார்ப்போம்.
தனிமையை தவிர்த்தல்:
ஒற்றைக் குழந்தைகள் தனிமையை அதிகமாக
உணர்வார்கள். தனியாக வளர்வதால் மற்றவர்
களிடம் சகஜமாகப் பழகுவதற்குத் தயங்குவார்கள்.
அவர்களிடம் பெற்றோர்கள் தோழமை உணர்வோடு
பழக வேண்டும். எல்லா விஷயங்களையும் பெற்றோ
ரிடம் அவர்கள் மனம் விட்டு பேசும் அளவுக்கு
நடந்து கொள்ள வேண்டும்.
ALSO READ TNPSC | GROUP-1 | SYLLABUS | PDF FILE
சமூக நடத்தை மற்றும் பகிர்தல்:
பொது இடங்களில் மற்றவர்களுடன் நட்பாக பழகு
வது, வயதில் மூத்தவர்களை மதித்து நடப்பது, தம்மிடம்
இருப்பதை இல்லாதவருடன் பகிர்ந்து கொள்வது
போன்ற பண்புகளை சிறு வயதிலிருந்தே கற்றுக்
கொடுக்க வேண்டும்.
தவறைச் சுட்டிக் காட்டுதல்:
ஒரே குழந்தை என்பதால், அவர்கள் செய்யும் தவறு
களைக் கண்டும் காணாமல் இருக்கக் கூடாது குழந்தை
செய்யும் தவறுகளை நல்ல முறையில் சுட்டிக்காட்டி
அறிவுரை கூறி திருத்த வேண்டும்.
மன்னிப்பு கேட்கப் பழக்குதல்:
ஏதேனும் தவறு செய்தால், செய்த தவறை
உணர்ந்து மன்னிப்பு கேட்கும் பழக்கத்தை கற்றுக்
கொடுக்க வேண்டும். தவறு செய்துவிட்டால் பெரியவர்,
சிறியவர் போன்ற பேதங்களைப் பார்க்காமல் மன்னிப்பு
கேட்க வேண்டும் என்று, அவர்கள் மனதில் பதிய
வைக்க வேண்டும். இது குழந்தையிடம் தனி மனித
ஒழுக்கத்தை மேம்படுத்தும்.
சுதந்திரம்:
ஒரே குழந்தை என்பதால் கைக்குள்ளேயே வைத்து
வளர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். தனியாக சிந்திக்க
வும், செயல்படவும் அனுமதிக்க வேண்டும். அவர்
களுடைய ஆர்வத்தைத் தெரிந்து கொண்டு அதை
நோக்கி நல்ல முறையில் வழி நடத்த வேண்டும்.
பணத்தின் மதிப்பை உணர்த்துதல்:
குழந்தை கேட்கும் அனைத்தையும், கண்ணை
மூடிக்கொண்டு வாங்கிக் கொடுப்பதைத் தவிர்க்க
வேண்டும். தேவை அறிந்து பொருள் வாங்குதல்,
குடும்ப பொருளாதார நிலை, கஷ்டப்பட்டு பணம்
சம்பாதிக்கும் சூழல் என பொருளாதார ரீதியான
அனைத்து விஷயங்களையும் சிறு வயதிலிருந்தே புரிய
வைக்க வேண்டும்.
சூழலை ஏற்றுக்கொள்ளும் பழக்கத்தை உரு
வாக்குதல்:
ஒரே குழந்தை என்பதற்காக, கல்வி, உணவு,
போன்றவற்றுக்காக அதிகமாக செலவு
செய்து, ஆடம்பர வாழ்க்கை முறைக்குப் பழக்கக்
கூடாது. எல்லா சூழ்நிலைகளிலும் சீரான வாழ்க்கை
வாழ்வதற்கு கற்றுத் தர வேண்டும்.
No comments:
Post a Comment