சம்பளம், ஓய்வூதியம், EMI செலுத்துதலுக்கான புதிய விதிகள் ஆகஸ்டு 1 முதல் அமல் – RBI அறிவிப்பு!
ரிசர்வ் வங்கியானது ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நேஷனல் பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவால் இயக்கப்படும் NACH திட்டத்திற்கான புதிய விதிகளை அமல்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.
புதிய விதிகள்:
பொதுவாக நாம் நமது மாதாந்திர செலவுகளையும், கடன் தவணைகளையும் தனித்தனியாக குறிப்பிட்ட முறையில் செலுத்துவோம். தற்போது RBI மாதந்திர ஊதியம் பெறும் நபர்கள் இது போன்ற தங்களின் மாதந்திர கடன் தவணை மற்றும் செலவுகளை ஒரே தளத்தின் வழியாக செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் தேசிய தானியங்கி கிளியரிங் ஹவுஸ் (NACH) மூலம் செயல்படுத்த இருக்கிறது.
தேசிய தானியங்கி கிளியரிங் ஹவுஸ் என்பது நேஷனல் பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தால் இயக்கப்படும் மொத்த கட்டணம் செலுத்தும் முறையாகும். இதன் மூலம் EMI செலுத்துதல், வட்டி, சம்பளம், ஓய்வூதியம் போன்ற பல பரிவர்த்தனைகளுக்கு பணத்தை செலுத்த உதவுகிறது. மேலும், மின்சாரம், எரிவாயு, தொலைபேசி, நீர் கட்டணம், காப்பீடு தொகை, நிதி முதலீடு போன்றவற்றையும் செய்ய உதவுகிறது.
NACH வாரத்தின் அனைத்து நாட்களிலும், ஆகஸ்ட் 1, 2021 முதல் செயல்பட இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி ஜூன் மாதம் அறிவித்துள்ளது. மேலும், இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் அனைத்து வசதிகள் பற்றிய அனைத்து நடவடிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்களும் RBI ஆல் தனித்தனியாக அறிக்கையாக வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment