சட்டப்படிப்பு பயில்வதற்கான தகுதிகள் என்னென்ன? சட்டப்படிப்பு படிக்க சிறந்த கல்வி நிலையங்கள் எவை? சட்டப்படிப்பு பயில அரசின் ஊக்கத்தொகை கிடைக்குமா? சட்டம் படித்தோருக்கு எங்கெல்லாம் வேலை வாய்ப்பு கிடைக்கும்? - சட்டப்படிப்பில் உள்ள உட்பிரிவுகள் குறித்தும், அது சார்ந்த வேலைவாய்ப்புகள் குறித்தும் பார்ப்போம்.
ALSO READ ; தமிழக பள்ளிகளில் 9, 10-ம் வகுப்புகளில் இடைநிற்றல் விகிதம் அதிகம் மத்திய கல்வி அமைச்சகம் தகவல்
டிப்ளமோ பாடப் பிரிவுகள்: டிப்ளமோ இன் க்ரிமினல் லா, டிப்ளமோ இன் பிஸ்னஸ் லா, டிப்ளமோ இன் கார்ப்ரேட் லா & மேனேஜ்மெண்ட், டிப்ளமோ இன் கோ-ஆப்ரேட்டிவ் லா, டிப்ளமோ இன் சைபர் லா, டிப்ளமோ இன் க்ரிமினாலஜி, டிப்ளமோ இன் ஹியூமன் ரைட்ஸ் லா. டிப்ளமோ படிப்புகளை 1 முதல் 3 வருடப் படிப்புகளாக படிக்கலாம்.
இளநிலை பாடப் பிரிவுகள்: எல்.எல்.பி. பேச்லர் ஆஃப் லா, பி.பி.ஏ.+ எல்எல்.பி. - பேச்லர் ஆஃப் பிஸ்னஸ் அட்மினிஸ்ட்ரேஷன் & பேச்லர் ஆஃப் லெஜிஸ்லேட்டிவ் ஆஃப் லா - Bachelor of Business Administration & Bachelor of Legislative of Law, பி.ஏ.+ எல்எல்.பி. - பேச்லர் ஆஃப் ஆர்ட்ஸ் & பேச்லர் லெஜிஸ்லேட்டிவ் ஆஃப் லா, பி.காம் + எல்எல்.பி. - பேச்லர் ஆஃப் காமர்ஸ் & பேச்லர் ஆஃப் லெஜிஸ்லேட்டிவ் ஆஃப் லா, பி.எஸ்.எல் + எல்எல்.பி. - பேச்லர் ஆஃப் சோஷியோ - லீகல் சயின்ஸஸ் & பேச்லர் ஆஃப் லா.இளநிலை படிப்புகளை 3 முதல் 5 வருடப் படிப்புகளாக படிக்கலாம்.
சான்றிதழ் பாடப் பிரிவுகள்: சர்டிஃபிகேட் கோர்ஸ் இன் சைபர் லா, சர்டிஃபிகேட் கோர்ஸ் இன் பிஸ்னஸ் லா, சர்டிஃபிகேட் கோர்ஸ் இன் கார்ப்ரேட் லா, சர்டிஃபிகேட் கோர்ஸ் இன் ஆண்டி- ஹியூமன் ட்ராஃபிகிங், சர்டிஃபிகேட் கோர்ஸ் இன் இன்சூரன்ஸ் லா. சான்றிதழ் பாடங்களை 2 வாரங்கள் முதல் 6 மாதப் படிப்புகளாக படிக்கலாம்.
தமிழகத்தில் உள்ள 38 கல்லூரிகளில் சட்டப்படிப்பு பயிற்றுவிக்கப்படுகிறது. சட்டப்படிப்பு சார்ந்த வேலைவாய்ப்புகள்: லாயர், பப்ளிக் ப்ராசிகியூட்டர், கார்ப்ரேட் ஆஃபிஸ் லீகல் அட்வைசர், விரிவுரையாளர், லீகல் எக்சிகியூட்டிவ்ஸ்.
சில முக்கியக் குறிப்புகள்: எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாணவர்கள் இளநிலைப் பட்டப்படிப்பை 35% மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்; ஒருங்கிணைந்த சட்டப் படிப்பில் சேர வேண்டுமெனில், பள்ளி மேல்நிலைப்படிப்பை முடித்திருக்க வேண்டும்;
அம்பேத்கர் சட்ட பல்கலை மூலம் நடத்தப்படும் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு கிடையாது; +2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
சட்டத்துறையில் முதுநிலைப் படிப்பில் சேர வேண்டுமெனில், இளநிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும்; CLAT தேர்வின் அடிப்படையிலேயே தேசிய சட்ட பள்ளிகளில் சேர்க்கை நடைபெறும்; டெல்லி தேசிய சட்டப் பல்கலை, ஒரிசா சட்டப் பல்கலை தாங்களே நுழைவுத் தேர்வை நடத்துகின்றன; பிற தன்னாட்சி சட்டக் கல்வி நிறுவனங்கள், தாங்களே நடத்தும் நுழைவுத் தேர்வுகளின் மூலமாக மாணவர் சேர்க்கையை மேற்கொள்கின்றன.
No comments:
Post a Comment