வகுப்பு 4 முதல் 9 வரை பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி தேர்வு நடத்த கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, August 5, 2021

வகுப்பு 4 முதல் 9 வரை பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி தேர்வு நடத்த கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

முதன்மைக் கல்வி அலுவலர், கிருஷ்ணகிரி மாவட்டம் அவர்களின் செயல்முறைகள் 

முன்னிலை: திரு.ர.பாலமுரளி, எம்.ஏ.,பி.எட்., p.C.No.11 / 2021 நாள் : .08.2021 

பொருள்: 

தமிழ்நாடு பள்ளிக் கல்வி - கிருஷ்ணகிரி மாவட்டம் - அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கநிலை / நடுநிலைப் பள்ளி / அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 4-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி தேர்வு நடைபெறுதல் - சார்பாக. 

கோாவிட்-19 பெருந்தொற்று காரணத்தினால் அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கநிலை / நடுநிலைப் பள்ளி / அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2021-22-ம் கல்வி ஆண்டில் ஜூன் மற்றும் ஜூலை இரு மாதங்களாக கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் நேரடி வகுப்பு நடைபெறாத நிலையில் கற்றல் அடைவு நிலை அறிய கல்வி தொலைக்காட்சி வழியாகவும், இணையவழி மற்றும் TNTP, DIKSHA, Teachmint App, Zoom App, Whattsapp, Google Meet, MS Teams, Youtube மற்றும் இதர கல்வி சார்பான Apps மூலமாக LIVE Class செயல்படுத்தி வலைதளங்கள் வழியாகவும் கற்றல் கற்பித்தல் செயலப்பாடுகள் மாவட்ட அளவில் செம்மையாக நடைபெற்று வருகிறது. 

இதன் தொடர்ச்சியாக, பள்ளிகளில் பாட வாரியாக பாடத்திட்டங்கள் எளிமையாக்கப்பட்டு, மாணவர்கள் எவ்வாறு கற்றல் அடைவினை பெற்றுள்ளனர் என்பதை அறிய, ஜூன்-2021-ம் மாதத்திற்கான பயிற்சி தேர்வு 4-5-ம் வகுப்பு மாணவர்களுக்கு 30 மதிப்பெண்கள், 6-9-ம் வகுப்பு மாணவர்களுக்கு 50 மதிப்பெண்கள் என நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான வினாத்தாட்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திலிருந்து குறுவள மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக அனைத்து பள்ளிகளுக்கும் whattsapp மற்றும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைக்கப்படும். பயிற்சி தேர்வு குறித்து அனைத்து மாணவர்களும் அறியும் வண்ணம் முன்கூட்டியே தெரியப்படுத்தி, முறையாக பயிற்சி அளித்து மாணவர்களை தேர்விற்கு தயார் செய்ய வேண்டும் என அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

மேற்காண் பயிற்சி தேர்வு காலை 10.00 முதல் 11.30 மணி வரை நடைபெற வேண்டும். பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மூலம் வினாத்தாட்கள் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டு தேர்வு எழுதி, தேர்வு நடைபெற்ற நாளன்றே Whattsapp அல்லது பெற்றோர்கள் மூலமாக மீள பெறப்பட வேண்டும். விடைத்தாட்கள் மதிப்பீடு செய்த பின், அதனை பகுப்பாய்வு செய்து, குறைந்த கற்றல் அடைவு பெற்ற மாணவர்களுக்கு தனிகவனம் செலுத்தி மீள குறைத்தீர் கற்றல் நடைபெற வேண்டும். 

பயிற்சி தேர்வுகள் முறையாக நடைபெறுவதை மாவட்டக் கல்வி அலுவலர்கள், குறுவள மைய தலைமை ஆசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், (பொ) மேற்பார்வையாளர்கள் தொடர் கண்காணிப்பு செய்து, கோாவிட்-19 பெருந்தொற்று (SOP) பின்பற்றி எவ்வித புகார்களுக்கு இடமளிக்க வண்ணம் செயல்படுமாறு தெரிவிக்கப்படுகிறது. 
ஆய்வு அலுவலர்கள் பள்ளிக்கு வரும் பொழுது, ஜூன்-2021-ம் மாத பயிற்சி தேர்வின் மதிப்பெண் பதிவேடுகளை பார்வைக்கு உட்படுத்த வேண்டுமென தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், கிருஷ்ணகிரி. 

பெறுதல் 

1. மாவட்டக் கல்வி அலுவலர், கிருஷ்ணகிரி, மத்தூர், ஓசூர், தேன்கனிக்கோட்டை. 
2. அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கநிலை / நடுநிலைப் பள்ளி / அரசு / அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள். 
3 அனைத்து குறு வள மைய தலைமை ஆசிரியர்கள். 
4. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள். 
5. அனைத்து (பொ) மேற்பார்வையாளர்கள்.






No comments:

Post a Comment