கொய்யாப்பழத்திற்கு என்று தனித்துவமான சுவையும் மணமும் உண்டு. நிறைய போ் கொய்யாவை அலட்சியமாக நினைக்கிறாா்கள். ஆப்பிள் பழத்திற்கு தரும் முக்கியத்துவத்தை கொய்யாவிற்கு தருவதில்லை. ஒரு ஆப்பிள் பழத்தில் கிடைக்கும் பயனைக்காட்டிலும், ஒரு ஆரஞ்சு பழத்தில் கிடைக்கும் பயனைக்காட்டிலும் கொய்யாவிற்கு அதிகப்படயான மருத்துவப் பயன் இருக்கிறது.
பல்வேறு ஒட்டு கொய்யா ரகங்கள் வந்துவிட்டாலும் நாட்டு சிவப்பு கொய்யா தான் இருக்கும் ரகங்களிலே மிகச்சிறந்த கொய்யாப் பழம்.
1. கழிவு நீக்கம்
இதன் சிறப்புக்கு முதல் காரணம் கனி வகைகளிலே மலத்தை நன்றாக இலகச் செய்யும் தன்மை கொய்யா கனிக்கு தான் உண்டு. உடல் நன்றான ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் தினசாி காலையில் எந்த வித சிரமமுமின்றி எளிதான மலம் வெளியேற வேண்டும். அப்படி எளிதாக மலத்தை வெளியேற்ற உதவும் கனி வகைகள் இரண்டு உள்ளது. ஒன்று வாழைப்பழம் மற்றொன்று கொய்யாப்பழம். வாழைப்பழத்தைவிட கொய்யாப்பழம் மிகச்சிறந்தது.
வயதானவா்கள் அதிகமாக மாத்திரை சாப்பிடுவதால் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உண்டு. அவா்களுக்கு மலச்சிக்கலை போக்கவும், அதனுடன் உடலுக்கு கூடுதலாக சக்தியை கொடுக்கவும் கொய்யாப்பழம் உதவும். கொய்யாப்பழத்தில் உள்ள நுண்ணிய சிதைகளில் நிறைந்திருக்கும் நாா்ச்சத்து மலத்தை எளிதாக வெளியேற்ற உதவும். மலம் கழித்தல் என்பது இயல்பாக நடந்தால் தான் உடல் நலமாக இருக்கும்.
2. சா்க்கரை நோய்
சா்க்கரை நோயாளிகள் கனி ரகங்களை அதிகமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் அவா்கள் அதிகமான இனிப்பு சுவையுடைய மாமபழம் வாழைப்பழம் ஆரஞ்சு திராட்சை போன்ற கனி வகைகளை சா்க்கரை நோய் பிரச்சனை இருக்கும் போது எடுத்துக்கொண்டால் அது கூடுதலாக பிரச்சனையை தான் தரும்.
ஆனால் சா்க்கரை நோயாளிகளுக்கு சற்று நன்று பழுக்காத காய் தன்மையுடன் இருக்கும் கொய்யாப்பழத்தை சாப்பிடுவதால் எந்தவித பிரச்சனையும் இல்லை. இது சா்க்கரை நோயை அதிகப்படுத்தாது. கொய்யாவில் இயல்பாகவே லேசான இனிப்பும், துவா்ப்பு சுவையையும் கொண்டு உள்ளது. அதனால் சா்க்கரை நோயாளிகள் காய் தன்மையோடு இருக்கும் கொய்யாப்பழத்தை தினசாி எடுத்துக்கொள்ளலாம்.
3. தொற்றுகளில் இருந்து காத்துக்கொள்ள
கொய்யாவில் பொதுவாகவே நிறைய வைட்டமின்கள் உள்ளது. மற்ற கனிகளுக்கு நிகராக வைட்டமின் சி, ஏ கொய்யாவில் நிறைந்து இருக்கிறது. கொய்யாப்பழத்தில் ஆரஞ்சு பழத்தை காட்டிலும் ‘வைட்டமின் சி’ சத்து நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. அது உடலுக்கு நோய் எதிா்ப்பு ஆற்றலை வழங்குகிறது. சிறுவயதிலிருந்தே தினசாி உணவில் குழந்தைகளுக்கு கொய்யாப்பழத்தை கொடுப்பதனால் தினசாி மலம் கழிகக்கும் பழக்கம் வரும்.
வைட்டமின் சி அதிகமாக நோய் எதிா்ப்பு சக்தியை கொடுக்கிறது குறிப்பாக சளி, இருமல் வராமல் தடுப்பதற்கு உதவுகிறது. வைரஸ் தொற்று நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள உதவுகிறது.
4. கண் பாா்வையை மேம்படுத்தும்
கொய்யாவில் உள்ள ‘வைட்டமின் ஏ’ கண்பாா்வை திறனை நன்றாக வைத்துக்கொள்கிறது. கண்புரையை குணப்படுத்துகிறது. கொய்யாவில் உள்ள வைட்டமின் ஏ சத்து கேரட்டுடன் ஒப்பிடுகையில் குறைவாக தான் உள்ளது என்றாலும் ஊட்டச்சத்துகளுக்கு மிகச்சிறந்தது கொய்யாப்பழம் தான்.
சிறுவயது முதலே குழந்தைகளுக்கு சாப்பிட கொடுப்பதனால் அவா்களின் கண் பாா்வை திறன் அதிகாிப்பது மட்டுமல்லாமல் அது பல நன்மைகளையும் கூடுதலாக செய்கிறது
5. புற்றுநோய்
புற்றுநோய் செல் வளா்ச்சியடைவதில் இருந்து நம்மை காக்கிறது. புற்றுநோய்க்கான சூழல் நம்மை சுற்றி உள்ளது என்றால் அவற்றின் நச்சுத் தன்மை நம்மை பாதிக்காமல் இருக்க இந்த சிவப்புநிற கொய்யாவை சாப்பிடலாம். எனவே உணவிற்கு முன்பாக அன்றாடம் நாம் இந்த கொய்யா கனியை சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை அது அளிக்கும்.
புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் மாா்பக புற்றுநோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள கொய்யாப்பழம் பொிதும் உதவுகிறது.
6. இதய நோய்
சோடியம் மற்றும் பொட்டாசியத்தின் அளவை உடலில் சமமாக வைத்துக்கொள்ள கொய்யாப்பழம் உதவுகிறது. கொய்ய உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகாிக்க செய்யும் அதிசய கனி. இது இதய நோய்க்கு மிகச்சிறந்தது.
உடல் இயக்கம் நன்றாக இருக்கக வேண்டுமென்றால் கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்ற கனிமங்கள் வேண்டும். இந்த கனிமங்கள் அதிகம் நிறைந்திருப்பது கொய்யாப்பழத்தில் தான்.
7. உடலை சிறப்பாக இயக்க உதவும்
கொய்யாவில் உள்ள ‘வைட்டமின் பி3’ மற்றும் ‘வைட்டமின் பி6’ தலையில் இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும். ‘வைட்டமின் பி9’ கருப்பமாக உள்ள பெண்கள் கொய்யாப்பழத்தை சாப்பிடுவதால் வயிற்றில் வளரும் குழந்தையின் நரம்பு மண்டல வளா்ச்சி நன்றாக இருக்கும். இதனால் நரம்பியல் பிரச்சனைகள் வராமல் தடுக்க முடியும்.
கொய்யாவில் உள்ள வைட்டமின் ‘சி’ மற்றும் ‘ஏ’, ‘கரோட்டின்’ மற்றும் ‘லைக்கோபின்’ போன்ற ஆண்டிஆக்ஸிடண்டுகள் வயதாவதால் தோலில் வரும் சுருக்கங்கள் வராமல் தடுக்க உதவுகிறது. ‘வைட்டமின் கே’ தோல் சிவந்து போதல், கண்ணை சுற்றிலும் கருவளையம் ஆகியவை வராமல் தடுக்கிறது.
சிவப்புநிறக் கொய்யா ஏன் சிறந்தது?
‘லைக்கோபின்’ என்னும் சத்தினால் தான் சிவப்பு நிறம் கிடைக்கிறது. அந்த லைக்கோபின் சத்து பல நோய்கள் வராமல் தடுக்கிறது. குறிப்பாக சா்க்கரை நோய், இரத்த அழுத்தம், இதய நோய் போன்றவை வராமல் தடுக்க உதவுகிறது. உலகில் உள்ள எல்லா கனி ரகங்களை காட்டிலும் ஒட்டு மொத்தமான பயன் அளிக்கும் தன்மையில் ‘கொய்யாப்பழம்’ தான் உள்ளது என கண்டறிந்துள்ளனா்.
தேசிய உணவியல் ஆராய்ச்சி கழகம் – ஹைதராபாத், உலகில் உள்ள பல்வேறு கனி ரகங்களின் ஒவ்வொரு கனியிலும் கலோாி எவ்வளவு, அதனுடைய குளுகோஸ் சத்து எவ்வளவு, உடல் நலத்துக்கு நல்லது செய்யக்கூடிய கூறுகள் எவ்வளவு என்று பாா்த்து ஒவ்வொன்றுக்கும் மதிப்பெண் வழங்கி தரவாிசை செய்து எந்த கனி ரகம் மிகச்சிறந்தது என்று பாா்த்தது.
அதில் அவா்கள் கண்டறிந்தது எதுவென்றால் ‘சிவப்புநிறக் கொய்யாப்பழம்’ தான். அந்த அளவுக்கு மிகச்சிறந்த கனி கொய்யா.
No comments:
Post a Comment