வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, August 9, 2021

வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்.2419 /அ4/2021 நாள் 09.08.2021 

பொருள் : 

தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப்பணி - வேலூர் மாவட்டம், அரசு / நகராட்சி / மாதிரி | மேல்நிலைப் பள்ளிகளின் 2021-2022ம் கல்வியாண்டு - 01.08.2021 அன்றைய நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் - மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் அனுமதிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர் விவரங்களை கல்வி மேலாண்மை தகவல் மைய (EMIS) இணையதளத்தில் பதிவுகள் மேற்கொள்ள அறிவுறுத்துதல் மற்றும் ஒப்படைத்தல் - சார்பாக. 

பார்வை: 

1. சென்னை, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) அவர்களின் செ.மு.ந.க.எண்.039965/டபிள்யு2/இ3/2021 நாள் 05.08.2021 
2. அரசாணை எண்.525, பள்ளிக் கல்வித்துறை நாள் 29.12.1997 
3. அரசாணை (நிலை) எண்.231 பக (சி2) துறை நாள் 11.08.2010  

பார்வையில் கண்ட அரசாணைகள் மற்றும் செயல்முறைகளின்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு / நகராட்சி / மாதிரி / மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2021 நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கைகேற்ப முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

01.08.2021 அன்றைய நிலவரப்படி அரசு / நகராட்சி / மாதிரி / மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்படவேண்டும். இதன் அடிப்படையில் 2021-2022ம் கல்வியாண்டிற்கான பணியாளர் நிர்ணயம் சார்பான பணிகள் கல்வி மேலாண்மை தகவல் முறைமை (EMIS) மூலமாக மேற்கொள்ளப்பட இருக்கின்றது. 

எனவே EMIS இணையதளத்தில் பள்ளிகள் சார்ந்த கீழ்குறிப்பிட்ட விவரங்கணை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். 


1. மாவட்டத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து அரசு / அரசு மாதிரிப் பள்ளிகள் / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2021 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையினை வகுப்பு வாரியாகவும் (Class wise) மற்றும் தமிழ் வழி / ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களின் விவரங்கள் ஆகியவற்றினை பதிவேற்றம் செய்தல் வேண்டும். 

2. ஒவ்வொரு பள்ளியிலும் அரசால் அனுமதிக்கப்பட்ட (Sanctioned Post details) முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பணியிடங்களின் விவரங்களை பள்ளியின் அளவுகோல் பதிவேட்டின்படி (Scale Register) ஒப்பிட்டு சரிபார்த்து பதிவேற்றம் செய்திடல் வேண்டும். அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும்போது இப்பணியிடங்கள் கடந்த ஆண்டுகளில் ஆசிரியரின்றி உபரி எனக் கண்டறியப்பட்டு (Surplus Post without person) இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்யப்பட்டிருந்தால் பள்ளியின் அளவுகோல் பதிவேட்டில் (Scale Rejsa) சரண்செய்யப்பட்ட பணியிடங்களை நீக்கம் செய்வதுடன், அப்பணியிடங்களை எக்காரணம் கொண்டும் மீளவும் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களாக கருதி பதிவேற்றம் செய்தல் கூடாது
















No comments:

Post a Comment