ஹிரோஷிமா- நாகசாகி தினம்
அமெரிக்கா 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில், ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய நகரங்களின் மீது அணுகுண்டு வீசித் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதுபோல எப்போதும் நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
இரண்டாம் உலகப் போர் முடியும் கட்டத்தில் ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டுகளை வீசி 76 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஹிரோஷிமாவில் வாழ்ந்த 3,50,000 பேரில், இந்த குண்டுவீச்சில் 1,40,000 பேர் மரணம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.
நாகசாகியில் குறைந்தது 74 ஆயிரம் பேர் மாண்டதாகத் தெரிகிறது. இந்த குண்டுவீச்சுகளைத் தொடர்ந்து 1945 ஆகஸ்ட் 14ஆம் தேதி நேசப் படையினரிடம் ஜப்பான் சரணடைந்ததை அடுத்து ஆசியாவில் திடீரெனப் போர் முடிவுக்கு வந்தது. அணுகுண்டு வீச்சில் தப்பியவர்கள் ஹிபாகுஷா எனப்படுகின்றனர்.
குண்டுவீச்சைத் தொடர்ந்து கதிர்வீச்சின் விஷத்தன்மை மற்றும் மன ரீதியிலான அழுத்தம் எனக் கொடூரமான அனுபவங்களை அவர்கள் சந்தித்தனர்.
ஹிரோஷிமா நினைவு அருங்காட்சியகம் மற்றும் அமைதிப் பூங்கா:
அணுகுண்டு வீசப்பட்டுப் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆகஸ்ட் 1955-ல் ஹிரோஷிமா அமைதி நினைவு அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.
ஹிரோஷிமா குண்டுவெடிப்பின் தடங்கள், அதுகுறித்த வரலாற்றுப் பதிவுகள் அங்கே உள்ளன. அருங்காட்சியகத்தை ஒட்டிச் செயல்படும் ஹிரோஷிமா அமைதிப் பூங்கா அணுகுண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் நினைவைப் போற்றுவதற்காக ஏற்படுத்தப்பட்டது. இந்த அமைதிப் பூங்காவின் ஒரு பகுதியாக அணுகுண்டு மாடம் உள்ளது.
குண்டுவெடிப்பின்போது ஒட்டுமொத்தமாகத் தரைமட்டமாகாமல் தப்பித்த ஒரே கட்டிடம் இது.
அறிவியல் ஆக்கத்திற்கே:
இன்று உலக நாடுகள் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. அறிவியலை ஆக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற உணர்வை நமது பள்ளி மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் எடுத்துக் கூற வேண்டும்.
இந்த நாளில் உலக சமாதானம், சமத்துவம், உலக சூழல் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதே நாம் எடுக்க வேண்டிய முக்கியமான சபதமாகும்.
பள்ளி / கல்லூரி மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள்;
இந்த ஹிரோஷிமா - நாகசாகி தினத்தை அனுசரிக்கும் விதமாக உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் மற்றும் பூலாங்கிணறு நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் கட்டுரைப் போட்டி நடத்தப்பட உள்ளது.
கட்டுரைப்போட்டி தலைப்புகள்:
6 முதல் 8-ம் வகுப்பு: ”அறிவியலும் தொழில்நுட்பமும் ஆக்கத்திற்கே”
9 முதல் 12-ம் வகுப்பு: “ ஹிரோஷிமா, நாகசாகி பற்றி நீங்கள் அறிந்தவை”
கல்லூரி : “உனது பார்வையில் அறிவியல் வளர்ச்சியும் உலக சமாதானமும்”
ஓவியப் போட்டி தலைப்பு:
1 முதல் 5-ம் வகுப்பு : அறிவியல் வளர்ச்சி
6 முதல் 12-ம் வகுப்பு : உனது பார்வையில்- அறிவியல் ஆக்கத்திற்கே
கல்லூரி: அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியும் எதிர்கால இளைஞர்களும்
· கட்டுரைகளை 3 பக்கங்களுக்கு மிகாமல் எழுதி அனுப்பலாம்.
·
ஓவியங்களை ஏ4 தாள் அளவிற்கு வரைந்து அனுப்பலாம்.
· கலந்துகொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
. கடைசி நாள்: ஆகஸ்ட் 10, 2021
கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்குப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
மேலும், அறிவியல் சார் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ஒரு நாள் களப்பயணமாக அழைத்துச் செல்லப்படுவர்.
கட்டுரை மற்றும் ஓவியங்களை galilioscienceclub@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமும் அனுப்பலாம்.
மேலும் தகவல்களுக்கு: 8778201926
No comments:
Post a Comment