ஆசிரியர்களுக்கு இணைய வழியாக அடிப்படை கணினி பயன்படுத்துதல், EMIS, Hi-Tech Lab மற்றும் ICT ஆகியவற்றில் திறன் வளர் பயிற்சிக்கான கால அட்டவணை - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, August 7, 2021

ஆசிரியர்களுக்கு இணைய வழியாக அடிப்படை கணினி பயன்படுத்துதல், EMIS, Hi-Tech Lab மற்றும் ICT ஆகியவற்றில் திறன் வளர் பயிற்சிக்கான கால அட்டவணை

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 

அனுப்புநர் பெறுநர் 
மாநில திட்ட இயக்குநர், 
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, 
சென்னை - 600 006. 

முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்ட திட்ட அலுவலர்கள், 
அனைத்து மாவட்டங்கள் 

ந.க.எண்: 1845/அ 11/பயிற்சி/ஒபக/2021 நாள்: 6.08.2021 அய்யா / அம்மையீர், 

பொருள்: 

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - 2021-22 ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணைய வழியாக அடிப்படை கணினி பயன்படுத்துதல், EMIS, Hi-Tech Lab மற்றும் ICT ஆகியவற்றில் திறன் வளர் பயிற்சிக்கான கால அட்டவணை மாவட்டங்களுக்கு தெரிவித்தல்- சார்ந்து. 

பார்வை: 

இவ்வலுவலகக் கடிதம் ந.க.எண்: 1845 அ11/ பயிற்சி /ஒபக /2021 நாள்: 30.07.2021 

ஆசிரியர்களுக்குத் தொடர்ந்து கற்றல், கற்றுக் கொண்டே இருத்தல், அறிவை புதுப்பித்தல் ஆகியன மிக அவசியம் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் பணியிடைப் பயிற்சி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது, 

பார்வையில் கண்ட இவ்வலுவலகக் கடிதத்திற்கேற்ப அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணைய வழியாக அடிப்படை கணினி பயன்படுத்துதல், EMIS, HI-Tech Lab மற்றும் ICT ஆகியவற்றில் திறன் வளர் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு அதற்கான கருத்தாளர்கள் மற்றும் உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தின் பொறுப்பு ஆசிரியர்களுக்கும் 2.8.2021 முதல் 6.8.2021 வரை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சியானது பல கட்டங்களாக ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். 5.8.2021 அன்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு நடைபெற்ற இணையவழி கூட்டத்தில் பெறப்பட்ட கருத்துக்கள் அடிப்படையில், முதற்கட்டமாக 12500 முதுநிலை ஆசிரியர்களுக்கு 9,8,2021 அன்று முதல் திட்டமிடப்பட்டிருந்த பயிற்சி 12.08.2021, 13.08.2021, 16.08.2021 முதல் 18.08.2021 வரை பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது






No comments:

Post a Comment