செய்தி வெளியீடு எண்: 574
நாள்:06.08.2021
செய்தி வெளியீடு
தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு மேலும் இரண்டு
வாரங்களுக்கு நீட்டிப்பு- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு
காலை
தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பரவலின் தன்மை
அதன் தாக்கம் குறித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்
தலைமையில் இன்று (6-8- 2021) தலைமைச் செயலகத்தில் மருத்துவ
நிபுணர் குழுவுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட
வாரியான நோய்ப் பரவல், ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடுப்பூசி குறித்த
விழிப்புணர்வு மற்றும் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள்
செயலாக்கம் குறித்து மருத்துவ நிபுணர் குழுவினரிடம் ஆலோசனை
மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள
ஊரடங்கு 9- 8- 2021 அன்று
6.00 மணியுடன்
முடிவடையவுள்ள நிலையில், மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில்
காணப்படும் நோய்த் தொற்று பரவல்; அண்டை மாநிலங்களில்
நோயின் தாக்கம் மற்றும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்
ஆகியவை குறித்து அரசு உயர் அலுவலர்கள் மற்றும் காவல்துறை
அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அடிப்படையில்,
நடைமுறையில் உள்ள
கட்டுப்பாடுகளுடன் கூடுதலாக நோய்த்தொற்று பரவலை
கட்டுப்படுத்தும் நோக்குடன் அதிக அளவில் பொதுமக்கள் ஒரே
இடத்தில் ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில்
வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத
வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு மட்டும் தடை
விதிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment