தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளின்
மாணவர் சேர்க்கை - 2021
கல்லூரிக் கல்வி இயக்ககம், சென்னை - 600006
இளநிலை கல்வியியல் பட்டப்படிப்பு - பி.எட்.,
(Under Graduate Courses - B.Ed.) சேர்க்கை : 2021-2022
வெம்
தமிழகத்தில் உள்ள 7 அரசு கல்வியியல் மற்றும் 14 அரசு உதவி பெறும் கல்வியியல்
கல்லூரிகளில் உள்ள இளநிலை கல்வியியல் பட்டப்படிப்பு (பி.எட்.) முதலாமாண்டு மாணாக்கர்
சேர்க்கைக்கான (2021-2022) விண்ணப்பங்களை இணையதளம் வழியாக 13.09.2021 முதல்
22.09.2021 வரை www.tngasaedu.in மற்றும் www.tngasaedu.org என்ற இணையதள முகவரிகளில்
பதிவு செய்யலாம். இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள் அருகில் உள்ள
கல்வியியல் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பம் பதிவு செய்ய விண்ணப்பக் கட்டணமாக ரூ.500/- (ரூ. ஐந்நூறு மட்டும்)
செலுத்தப்பட வேண்டும். SC/ST விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் ரூ.250/- (ரூ. இருநூற்று
ஐம்பது மட்டும்) செலுத்தினால் போதுமானது. மாணாக்கர்கள் விண்ணப்பிக்கும்போது தங்களது விருப்ப
வரிசைப்படி கல்லூரிகளைத் தெரிவு செய்தல் வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும்
எந்தெந்தக் கல்லூரிகளில் என்னென்ன பாடப் பிரிவுகள், சேர்க்கை எண்ணிக்கை விவரங்கள்
www.tngasaedu.in மற்றும் www.tngasaedu.org என்ற இணையதள முகவரிகளில் கொடுக்கப்பட்டுள்ளது.
இணையதளத்தில் பதிவு செய்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால் மாணாக்கர்கள் 044 -
28271911 என்ற எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொண்டு கூடுதல்
விவரம் மற்றும் வழிகாட்டுதல் பெறலாம். இது தொடர்பாக care@tngasaedu.org என்ற மின்னஞ்சல்
முகவரி மூலமாகவும் மாணாக்கர்கள் சந்தேகங்களைக் கேட்டு தேவையான வழிகாட்டுதல்களைப்
பெறலாம்.
விண்ணப்பம் மற்றும் பதிவுக் கட்டணம் : விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை
விண்ணப்பதாரர்
No comments:
Post a Comment