ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவதில் பாகுபாடு இல்லை - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, September 17, 2021

ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவதில் பாகுபாடு இல்லை

மகப்பேறு விடுப்பு வழங்குவதில் ஊழியர்கள் இடையே எந்த பாகுபாடும் காட்டுவதில்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பணி வரன்முறைப்படுத்தப்படாத தற்காலிக பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கும் அரசாணையை முறையாக அமல்படுத்தக் கூறி தொடரப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.


அப்போது, மகப்பேறு விடுப்பு வழங்குவதில் வரன்முறை செய்யப்பட்ட ஊழியர்களுக்கும், வரன்முறைப்படுத்தப்படாத ஊழியர்களுக்கும் இடையே பாரபட்சம் ஏதும் காட்டுவதில்லை, வரன்முறைப்படுத்தப்படாத ஊழியர்களும் பணியில் சேர்ந்து ஓராண்டு முடிந்திருந்தால் விடுப்பை பெற்றுக்கொள்ளலாம் எனவும், மகப்பேறு விடுப்பை 270 நாட்களில் இருந்து 365 நாட்களாக அதிகரித்து கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

No comments:

Post a Comment