ஆரோக்கியமான
உடல் எடை என்பது, அவரவர் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இருப்பதாதாகும். அவ்வாறு உ ல் எடையை பேணிக்காப்பது
தான் பெரிய சவாலான விஷயம். தொடர்ச்சியான
உடல் எடை அதிகரிப்பு, உடல் பருமனுக்கு வழி
வகுக்கலாம்.
உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக
எடுக்கும் முயற்சிகள், உண்ணும் உணவு போன்றவை
உடலுக்கு ஆரோக்கியமானதாக இருக்கிறதா என்பதை
உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஆரோக்கியமான
உடல் எடையை, 'உடல் நிறை குறியீட்டெண் (BMI
பி.எம்.ஐ) மூலம் எளிமையான முறையில் கணக்
கிடலாம்.
ஒருவரது உடல் எடையையும், உயரத்தையும் கணக்
கிடும் முறை பி.எம்.ஐ எனப்படுகிறது. இந்த முறையில்
உடலின் எடை கிலோ கிராமிலும், உயரம் மீட்டரிலும்
கணக்கிடப்படுகிறது. இந்த கணக்கீட்டின்படி ஒருவரின்
பி.எம்.ஐ 18.5-க்கும் குறைவாக இருந்தால், பரிந்துரைக்கப்
பட்ட எடையை விட குறைவாக இருக்கிறார் என்று
பொருள். இவர் சத்தான உணவுகளை உட்கொள்ள
வேண்டும்.
போதுமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள
வேண்டும்.
18.5 முதல் 22.9 வரை இருந்தால் சரியான எடையுடன்
இருக்கிறார் எனலாம். 23 முதல் 24.9 வரை இருந்தால்
அதிக உடல் எடையை நோக்கி சென்று கொண்டிருக்
கிறார் என்று அர்த்தமாகும். இவர் தேவையான உடற்
பயிற்சிகள் மற்றும் உணவு கட்டுப்பாடு மேற்கொள்ள
வேண்டும். 25 முதல் 29.9 வரை இருந்தால் அதிக
எடையுடன் இருக்கிறார் எனலாம். இவர் தீவிரமான
உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
பி.எம்.ஐ அளவு 30-க்கும் மேல் இருந்தால்
அவர் உடல் பருமன் கொண்டவராகிறார். இவர்களுக்கு
நீரிழிவு, இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிக
மாக இருக்கும். தகுந்த மருத்துவ சிகிச்சை, உணவுக்
கட்டுப்பாடு போன்றவற்றை இவர்கள் மேற்கொள்ள
வேண்டும்.
குண்டாக இருப்பவர்கள் அனைவரும் ஆரோக்கியம்
இல்லாமல், ஏதோ ஒரு நோயுடன் இருக்கின்றனர் என்று
நினைக்க வேண்டாம். உடல் பருமனாவதற்கு முக்கிய
காரணம் மரபியல் காரணிகள்.
பெற்றோர் பருமனாக
இருந்தால், குழந்தைக்கும் உடல் பருமன் ஏற்பட
வாய்ப்பு உள்ளது. உடல் பருமன் எந்த வயதிலும்
ஏற்படலாம்.
நீங்கள் அதிக எடையுடன் இருக்கிறீர்களா அல்லது
உடல் பருமனால் அவதிப்படுகிறீர்களா என்பதை சில
அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். தட்டையான பாதங்
கள், முழங்கால், இடுப்பு மற்றும் முதுகெலும்பில்
தேய்மானம், நெஞ்சு மற்றும் உதரவிதானத்தைச் சுற்றி
கொழுப்புத் திசுக்கள் உண்டாவது, மூச்சு விடுவதில்
சிரமம், மூச்சுக்குழலில் தொற்று மற்றும் சிறிது தூரம்
நடந்தாலே மூச்சிரைப்பு ஏற்படுவது போன்றவை உடல்
பருமனின் அறிகுறிகளாகும்.
ஆரோக்கியமான முறையில் உடல்
அதிகரிப்பதற்கு, புரதச்சத்து மிக்க உணவுகளை எடுத்து
கொள்வது அவசியமானதாகும். மேலும் காய்கள், பழங்
கள், தவிடு நீக்கப்படாத அரிசி மற்றும் உடலுக்கு நன்மை
செய்யும் கொழுப்புச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக்
கொள்ள வேண்டும். தினமும் 30 நிமிடங்களாவது உடற்
பயிற்சி செய்ய வேண்டும். இது ஆரோக்கியமான முறையில்
உடல் எடையை சீராக வைத்திருக்க உதவும்.
எடையை
No comments:
Post a Comment