DSE கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்கள் - கோரி பள்ளிக்கல்வி இணைஇயக்குநரின் செயல்முறைகள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, September 10, 2021

DSE கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்கள் - கோரி பள்ளிக்கல்வி இணைஇயக்குநரின் செயல்முறைகள்

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணைஇயக்குநரின் (தொழிற்கல்வி) செயல்முறைகள் சென்னை-6 நக.எண்.34462/பிடி1/இ1/2020நாள்: 06.09.2021 

பொருள் 

பள்ளிக்கல்வி கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்கள் - கோருதல்- சார்ந்து. 

அரசுக்கடிதம் எண்.28024;DM IV (2)/2021-1, நாள்.26.08.2021 

பார்வை 9, 10 பார்வையில் கண்டுள்ள அரசுக்கடிதத்தில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு மட்டும் அனைத்து வகைப்பள்ளிகளும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 

அவ்வாறு பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பின், அது குறித்த விவரங்களை அரசிற்கு அனுப்பும் வகையில் இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் விவரங்களைப் பூர்த்தி செய்து இணை இயக்குநரின் (தொழிற்கல்வி) மின்னஞ்சல் முகவரி மற்றும் Google Sheet-ற்கு ஒவ்வொரு நாளும் பிற்பகல் 1 மணிக்குள் தொடர்ந்து அனுப்புதல் வேண்டும் என அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் 01.09.2021 முதல் 06.09.2021 முடிய உள்ள காலத்திற்கான விவரங்கள் இன்றே அனுப்பப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

//இது மிகமிக அவசரம்//

 இணைப்பு-படிவம் ஒம்! பூ.ஆ.நரேஷ் இணைஇயக்குநர் (தொழிற்கல்வி)


No comments:

Post a Comment