பி.ஆர்க் கவுன்சிலிங் பதிய இன்றே கடைசி - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, October 6, 2021

பி.ஆர்க் கவுன்சிலிங் பதிய இன்றே கடைசி

பி.ஆர்க்., படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு பதிவு செய்ய இன்றே கடைசி நாள்.

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 50க்கும் மேற்பட்ட கட்டட வடிவமைப்பியல் கல்லுாரிகளில், பி.ஆர்க்., படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. 

 இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, https://barch.tneaonline.org/ என்ற இணையதளத்தில், செப்., 20ல் துவங்கியது. இந்த பதிவுக்கு இன்றே கடைசி நாள். பதிவு செய்தவர்களுக்கு நாளை ரேண்டம் எண் வெளியிடப்பட உள்ளது.

இதையடுத்து, விண்ணப்பதாரர்களுக்கு அக்., 8 முதல் 21 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். தரவரிசை, 23ம் தேதி வெளியிடப்பட்டு, 26 முதல் கவுன்சிலிங் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment