பன்னீர் பூவின் மருத்துவ குணங்களும் பலன்களும் - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, November 10, 2021

பன்னீர் பூவின் மருத்துவ குணங்களும் பலன்களும்

பன்னீர் பூ பார்ப்பதற்கு சுண்டைக்காய் போல் இருக்கும். 

இந்த பன்னீர் பூவானது ஆயுர்வேத பயன்பாட்டில் இதன் பங்கு அதிகம் உள்ளது.

குறிப்பாக இது தூக்கமின்மை நரம்பு சோர்வு, ஆஸ்துமா மாற்று நீரிழிவு நோய்களை எதிர்த்து போராடும் தன்மை இதற்கு உண்டு. 

பன்னீர் பூ கணையத்தில் உள்ள பீட்டா செல்களை குணப்படுத்தி, இன்சுலின் பயன்பாட்டை சரி செய்கிறது. இது பீட்டா செல்களை சரி செய்வது மட்டுமல்லாமல், இன்சுலின் சுரப்பதற்கும் உதவுகிறது. மேலும் டைப் -2 நீரிழிவானது இன்சுலின் சுரப்பதை தடுக்கிறது. 

இதற்கு தீர்வு காணும் வகையில் இந்த பன்னீர் பூவானது இயற்கை மருந்தாக செய்லபடுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக கிடைத்துள்ள இந்த பன்னீர் பூ எளிதாக மூலிகை கடைகளில் கிடைக்க கூடியது. 

குறிப்பிடத்தக்க வகையில் இந்த பூக்களை பீங்கான் கப்பில் மட்டுமே ஊற வைக்க வேண்டும். இதில் கசப்பு தன்மை அதிகம் இருப்பதால் நீங்கள் தினமும் குடிக்கும் டீ கப்பை பயன்படுத்துவது சிறந்தது. 

ஊற வைப்பதற்கு அறை கப் தண்ணீர் போதும். முதல் கட்ட சர்க்கரை நோய்க்கு 3 இல் இருந்து 4 காய்கள். இரண்டாம் கட்ட சர்க்கரை நோய்க்கு 7 இல் இருந்து 8 காய்கள். தினமும் இரவில் ஊற வைத்து காலையில் ஊறிய காயை வடிகட்டியில் வடித்து அந்நீரை வெறும் வயிற்றில் குடித்து வர இரத்தத்தில் சர்க்கரையின் அளவு படிப்பு படியாக குறைந்து விடும். 

இதை சாப்பிட ஆரம்பித்ததும் மாதம் ஒரு முறை இரத்த பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இதனால் உங்களின் சர்க்கரையின் அளவு வெகு விரைவில் குறைவதை பார்க்கலாம்.

No comments:

Post a Comment