உடல் எடையை குறைக்க உதவும் இந்த பானத்தை தயாரிப்பது எப்படி...? - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, November 22, 2021

உடல் எடையை குறைக்க உதவும் இந்த பானத்தை தயாரிப்பது எப்படி...?

சீரக இஞ்சி நீர் உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கரைத்து உடல் எடையை குறைந்து விடும். 

மேலும் தினமும் இந்த நீரை குடித்து வந்தாலே போதும். எளிதில் தொப்பையை குறைத்து விடலாம். இஞ்சி மற்றும் சீரகத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன.

குறிப்பாக இவற்றின் மருத்துவ தன்மை நமது உடலில் நோய்கள் அண்டாமல் காத்து கொள்கிறது. 

இந்த சீரக இஞ்சி நீரை தயாரிக்க தேவையான பொருட்கள்: 

இஞ்சி-சிறு துண்டு, 

சீரகம்-1 ஸ்பூன், 

எலுமிச்சை சாறு-1/2 ஸ்பூன். 

செய்முறை: 

தேவையான அளவு நீரில் 1 ஸ்பூன் சீரகத்தை சேர்த்து ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின் மறுநாள் காலையில் அந்த நீரை வடிகட்டி கொண்டு அதனுடன் இஞ்சியை துருவி அல்லது நசுக்கி போடவும்.

பின்பு இந்த நீரை கொதிக்க விட்டு இறக்கி கொண்டு இந்த நீருடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து தொடர்ந்து 10 நாட்கள் குடித்து வந்தால் உங்கள் தொப்பை குறைந்து விடும். 

பயன்கள்: 

தினமும் காலையில் இந்த நீரை குடித்து வாருங்கள்.புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் இந்த நீருக்கு உள்ளது. 

குறிப்பாக மார்பக புற்றுநோய், கணைய புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்றவற்றில் இருந்து நம்மை காக்கும். உடலில் அளவுக்கு அதிகமாக சேர்ந்துள்ள கொழுப்புகளையும், கொலஸ்ட்ராலையும் இந்த சீராக இஞ்சி நீர் எளிதில் குறைத்து விடுகிறது. 

இஞ்சி சீராக நீரை குடித்து வருபவர்களுக்கு சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்குமாம். மேலும் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடன் இருக்க உதவும். கொலெஸ்ட்ராலால் ஏற்படுகின்ற இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு ஆகியவையும் இந்த நீரால் தடுக்க படுகிறது.

No comments:

Post a Comment