கருப்பட்டியை அன்றாட உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகள் !! - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, November 9, 2021

கருப்பட்டியை அன்றாட உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகள் !!

கருப்பட்டியை அன்றாட உணவில் சேர்ப்பதன் மூலம், ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. 

மேலும் கருப்பட்டி இயற்கையாக வெறும் பனை நீரைக் காய்ச்சி தயாரிக்கப்படுவதால், அதில் உள்ள சத்துக்கள் முழுமையாக உடலுக்கு கிடைப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. கருப்பட்டி அடர்ந்த நிறத்தில் இருக்கும். இதில் உள்ள மருத்துவ குணத்தால், உடலில் உள்ள பல பிரச்சனைகள் அகலும். 

கருப்பட்டியில் உடலின் அத்தியாவசிய செயல்பாட்டிற்குத் தேவையான கார்போஹைடிரேட் நிறைந்துள்ளது. ஆகவே இதனை ஒருவர் குடிக்கும் காபி அல்லது டீயில் சேர்த்துக் குடிப்பதால், கலோரிகளின்றி உடலின் ஆற்றல் அதிகரிக்கும். கருப்பட்டியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இது ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். 

உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் தான், இரத்த சோகை பிரச்சனை ஏற்படும். எனவே இரத்த சோகை ஏற்படாமல் இருக்க, கருப்பட்டியை அன்றாட உணவில் சேர்த்தால் இரத்த சோகை ஏற்படாது. 

ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், பொட்டாசியம், மக்னீசியம், காப்பர், ஜிங்க் மற்றும் இரும்புச்சத்து போன்றவை உடலின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, கிருமிகள் மற்றும் தொற்றுகளை எதிர்த்துப் போராடி, உடலுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும். 

 கருப்பட்டியில் உள்ள பொட்டாசியம் இதய ஆரோக்கியத்தைப் பராமரிப்பதோடு, இரத்த அழுத்தத்தையும் சீராக்கி, இரத்த அழுத்த பிரச்சனை வராமல் தடுக்கும். பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும் உளுந்தையும் சேர்த்து, உளுந்தங்களி செய்து சாப்பிடக் கொடுத்து வருவதால் அவர்களின் கருப்பை வலுப்பெற்று ஆரோக்கியமாக இருக்கும்.

No comments:

Post a Comment