சருமத்தை புதுப்பித்து ஆரோக்கியமாக வைக்க உதவும் கற்றாழை - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, November 10, 2021

சருமத்தை புதுப்பித்து ஆரோக்கியமாக வைக்க உதவும் கற்றாழை

தோல் நீக்கிய கற்றாழை தண்டுகளை சிறிதளவு மென்று சாப்பிட்டு வந்தால் ஈறுகள் பலம் பெறும். 

பற்களில் சொத்தை ஏற்படுத்தும் கிருமிகளை அழிப்பதிலும் கற்றாழை உதவுகிறது. 

கற்றாழையில் ஆன்டி-செப்டிக் குணங்கள் அதிகமாக உள்ளது. அதனால் காயங்கள், புண்கள் மற்றும் பூச்சிக் கடிகள் போன்றவற்றிற்கு இதனைப் பயன்படுத்தலாம். அதற்கு இந்த செடியின் உட்புறத்தில் உள்ள ஜெல் போன்ற பகுதியை காயம் பட்ட இடத்தில் தடவ வேண்டும். இது எரிச்சலை குறைத்து புண்களை செரிசெய்யும். கற்றாழைஜீஸ் தயாரித்து, அதில் சிறிதளவு நாட்டு சர்க்கரை கலந்து சாப்பிடுவதால் உடல் வெப்பம் தணியும். 

சிலருக்கு கோடைகாலங்களில் ஏற்படும் நீர்சுருக்கு அல்லது மூத்திரசுருக்கு போன்ற பிரச்சனைகளும் நீங்கும். உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். கற்றாழையில் உள்ள நார்ச்சத்துக்கள், மலச்சிக்கலை நீக்கி செரிமானத்திற்கு உதவும். அதிலுள்ள நார்ச்சத்துக்கள் மலச்சிக்கலுக்கு தீர்வாக அமையும்.

மேலும் இது மலச்சிக்கல் ஏற்படும் போது, அதனால் உண்டாக்கும் எரிச்சலையும் நீக்கும். கற்றாழையை பருக்களை நீக்க பயன்படுத்தலாம். ஆனால் கற்றாழையை கொண்டு பருக்களை முழுமையாக நீக்க முடியாது. அழற்சியையும், சருமம் சிவந்திருப்பதையும் தடுக்கலாம். 

மேலும் பருக்கள் உடைவதையும் தடுக்கும். கற்றாழை நோய் எதிர்ப்பு சக்தியை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. அது சருமத்தை புதுப்பித்து ஆரோக்கியமாக வைத்து அதன் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் செயல்பாடுகள் மூலம் சருமத்தை இளமையாக மாற்ற உதவுகிறது. கற்றாழை குளிர்ச்சி ஏற்படுத்தும் செடியாக விளங்குவதால், எரிச்சல்கள் மற்றும் வெந்த புண்களுக்கு அதனை பயன்படுத்தலாம். 

இது சரும திசுக்களை வேகமாக சரிசெய்து அணுக்களை புதுப்பிக்க உதவும். அதனால் பாதிப்படைந்த திசுக்கள் மீண்டும் சீரமைக்கப்படும்.

No comments:

Post a Comment