பொதுப்பணிகள் - கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த
இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் தமிழக அரசுப் பள்ளிகளில்
தமிழ் மொழியில் பயின்ற நபர்கள் ஆகியோருக்கு வேலைவாய்ப்பகங்கள்
வழியாக நிரப்பப்படுகின்ற அரசுப் பணியிடங்களில் முன்னுரிமை வழங்குதல்
மற்றும் வேலைவாய்ப்பகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பணி நியமனங்களில்
பின்பற்றப்பட்டு வரும் முன்னுரிமை முறையினை மறுசீரமைப்பு செய்தல் -
ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
மனித வள மேலாண்மைத் (கே.2) துறை
அரசாணை (நிலை) எண். 122
நாள்: 02.11.2021
பிலவவருடம், ஐப்பசி 16
திருவள்ளுவர் ஆண்டு-2052
படிக்க:
1.
அரசாணை (
நிலை) எண்.188, பணியாளர் மற்றும் நிருவாகச்
சீர்திருத்தத் (பணியாளர்-ப்பி) துறை, நாள் 28.12.1976.
2. அரசாணை (நிலை) எண் 398, பணியாளர் மற்றும் நிருவாகச்
சீர்திருத்தத் (ஆர்) துறை, நாள் 13.09.1990.
ஆணை
20212022-ஆம் ஆண்டிற்கான ஆளுநர் உரையில், 21.06.2021 அன்று
பின்வரும் அறிவிப்பு வெளியிடப்பட்டது:-
“தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக தமிழ்வழியில் பயின்றவர்களுக்கும்,
அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கும். அரசுப் பதவிகளுக்கான
வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படுவதை இந்த அரசு உறுதி
செய்யும் ".
No comments:
Post a Comment