காளானில் ஜின்க், காப்பர், மினரல், பொட்டாசியம், சோடியம் போன்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் இருக்கின்றன.
மற்றும் கே, சி, டி, பி போன்ற சத்துக்கள் உள்ளன.
காளானில் அதிக புரதச் சத்து உள்ளது. போலிக் அமிலம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் அதிக அளவில் இருப்பதால் இது ரத்தசோகைக்குச் சிறந்த மருந்து.
காளானில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறு போன்றவற்றைப் போக்கும். இதயத்தைப் பாதுகாக்கும்.
காளான் ரத்தசோகை போக்கும். நீரிழிவு நோயாளிகள் இதைச் சாப்பிடலாம்.
உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்த நாளங்களின் உட்பரப்பில் கொழுப்பு படிவதை காளான் தடுக்கிறது.
காளானில் உள்ள லென்ட்டைசின், எரிட்டிடைனின் போன்ற வேதிப்பொருட்கள் ரத்தத்தில் கலந்துள்ள டிரை கிளிசரைடு, பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.
உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டச்சத்தாக அமைகிறது.
காளானை உணவாக உட்கொள்வதன் மூலம் சத்துப் பற்றாக்குறையை போக்க முடியும்.
காளான்களில் புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள், அமினோ அமிலங்கள் அதிக அளவிலும், கொழுப்பு, மாவுச்சத்துகள் குறைவான அளவிலும் உள்ளன.
No comments:
Post a Comment