ஆரோக்கியத்திற்கு உதவும் சில பயனுள்ள மருத்துவ குறிப்புக்கள் !! - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, November 20, 2021

ஆரோக்கியத்திற்கு உதவும் சில பயனுள்ள மருத்துவ குறிப்புக்கள் !!

விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டால் பித்தத்தைக் குறைக்கலாம். 

சுக்கு, பால், மிளகு, திப்பிலி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும். 

உப்பு நீரை வாயில் வைத்து தொண்டை வரை படும்படி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி குணமாகும். 

முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால், இருமல் உடனே நிற்கும். 

கோதுமை கஞ்சியை மாதவிடாய் இருக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால், உடற்சோர்வு நீங்கி பலம்பெறும். 

தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வர ஆண்மை பெருகும், தாது விருத்தியாகும். பூண்டு, வெங்காயம் அதிகம் உணவில் சேர்த்து வந்தால் தேவையற்ற கொழுப்பு குறையும். 

கரும்பு தோகையை எரித்து சாம்பலாக்கி வெண்ணெயுடன் கலந்து உதட்டு வெடிப்புக்குப் போட்டால் உடனே குணமாகும். அல்லி இதழ்களை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து இரவில் முகத்தில் பூசி காலையில் குளித்து வர முகப்பருக்கள் ஒழியும். 

எலுமிச்சம்பழத்தின் சாறை ஓரிரு துளிகள் காதில் விட காது வலிதீரும்.

குடல்புண் குணமாகவும், வயிற்றுப்புழுக்கள் அழியவும் அகத்திகீரை நல்ல உணவு. 

 தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தினசரி ஒன்று சாப்பிட்டு வர நுரையீரல் பலப்படும். 

அத்திபழம் தினந்தோறும் 5 சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி சரியாகும். 

முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால் இருமல் உடனே நிற்கும்.

No comments:

Post a Comment