நெல்லிக்காயை நிழலில் காயவைத்து அதனை தேங்காய் எண்ணெய் உடன் சேர்த்து காய்ச்சி நன்றாக ஆறவைத்து தினமும் தலை முடியில் தேய்த்து வந்தால் முடி உதிர்வதை தடுத்து, உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளர செய்யும்.
பாதி எலுமிச்சையை தயிருடன் கலந்து தலையில் நன்றாக தடவி, 30 நிமிடங்கள் ஊற வைத்த பின்பு சீயக்காய் தேய்த்து தலை குளித்தால் பொடுகு தொல்லை நீங்குவதோடு தலை முடி உதிர்வும் நிற்கும்.
ஆலிவ் ஆயில் இரண்டு டேபிள் ஸ்பூன் தேன் அதற்கு சமமாக ஆலிவ் ஆயிலை எடுத்துக்கொண்டு அதனுடன் இலவங்கப்பட்டை பொடியை சேர்த்து பசை போன்று தயாரித்து, அக்கலவையை தொடர்ந்து தலையில் தேய்த்து வந்தால் தலைமுடி மிருதுவாவதோடு, முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளரும்.
ஆலோ வேரா ஜெல்லை வாரத்திற்கு இரண்டு முறை தலையில் தேய்த்து வந்தால் முடிக்கு மிகவும் நல்லது. ஆலோ வேரா இலையை இரண்டாக வெட்டி தலையில் தேய்த்து சில மணி நேரத்திற்கு பிறகு தலையை தண்ணீரில் கழுவ வேண்டும்.
தலைமுடி உதிர்வை தடுக்க ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை நன்கு அரைத்து, அதை ஒரு கப் தண்ணீரில் கலந்து கொண்டு, அந்த கரைசலை தலை முடியில் நன்கு தடவி, முக்கால் மணி நேரம் ஊற வைத்த பின்பு தண்ணீரில் தலைமுடியை அலச வேண்டும்.
இப்படி தொடர்ந்து செய்து வந்தால் தலைமுடி உதிர்வு, பொடுகு போன்றவற்றை தடுக்க முடியும்.
பசலை கீரை தலைமுடியின் வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின் சத்துகள் அதிகம் உள்ளன.
எனவே தினமும் சாப்பிடும் உணவுகளில் பசலை கீரையும் இடம்பெறுமாறு பார்த்து கொள்வதால் தலைமுடி உதிர்வை தடுக்க முடியும்.
கொத்தமல்லி இலைகளை நன்கு அரைத்து, அதை தலையில் தடவி கொண்டு சிறிது நேரம் கழித்து தலைக்கு குளித்தாலும் தலைமுடி உதிர்வை தடுத்து, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்.
No comments:
Post a Comment