தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி
"அனைவரும் கற்போம்"
*அனைவரும் உயர்வோம்"
அனுப்புநர்
இரா. சுதன் இ.ஆ.ப
மாநில திட்ட இயக்குநர்
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி
மாநிலத் திட்ட இயக்ககம்.
சென்னை -1
6
பெறுநர்
முதன்மைக் கல்வி அலுவலர்
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி
கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம்,
கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி,
மதுரை, தஞ்சாவூர், நாகப்பட்டினம்,
ஈரோடு, திருச்சிராப்பள்ளி, நீலகிரி
மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள்
நாள். 12 .11. 2021
ந.க.எண். 449/c7/ss/2021
அய்யா/ அம்மையீர்,
பொருள்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி- இல்லம் தேடிக் கல்வி
மையங்களுக்காக தேர்ந்தெடுக்கப்படவுள்ள தன்னார்வலர்களுக்கு
பயிற்சி- மாநில அளவிலான பயிற்சி வழங்குதல்- தொடர்பாக
பார்வை
இவ்வலுவலகக் கடிதம் ந.க.எண். 449/c7/ss/2021 நாள். 10.11. 2021
-
கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக 1 முதல் 8 வகுப்புகள் வரை
பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை
ஈடுசெய்வதற்காகத் தன்னார்வலர்களைக் கொண்டு தினசரி 1 முதல் 14 மணிநேரம்
(மாலை 5.00 மணிமுதல் 7.00 மணிக்குள்) கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு
மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையிலும் இடைநிற்றலை முற்றிலும்
களைவதற்கும் ஏற்றவகையில் செயல்படுத்தப்பட உள்ள "இல்லம் தேடிக் கல்வி
மையங்களுக்கென பார்வையிலுள்ள இவ்வலுவலகக் கடிதத்தின்படி
தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்கள். தேர்ந்தெடுக்கப்படவுள்ள
தன்னார்வலர்களுக்கு இல்லம் தேடிக் கல்வியின் முக்கியத்துவம், தன்னார்வலர்கள்
பங்களிப்பின் அவசியம் மற்றும் முக்கியத்துவம், தன்னார்வலர்களை
ஊக்கப்படுத்துதல், குழந்தைகளை கையாள வேண்டிய விதம் மற்றும் கற்றல்
கற்பித்தல் குறித்தும் முதற்கட்டமாக இருநாள்கள் பயிற்சி வழங்க
திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பயிற்சியானது குறுவளமைய பயிற்சியாக 1 - 5 வகுப்புகளை கையாளும்
தன்னார்வலர்களுக்கு ஒரு பிரிவாகவும் 6-8 வகுப்புகளை கையாளும்
தன்னார்வலர்களுக்கு மற்றொரு பிரிவாகவும் வழங்கப்படவுள்ளது.
No comments:
Post a Comment