உலகப்புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலையின் மூலம் இலவச ஆன்லைன் படிப்புகள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, November 25, 2021

உலகப்புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலையின் மூலம் இலவச ஆன்லைன் படிப்புகள்

உலகப்புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலையின் மூலம் இலவச ஆன்லைன் படிப்புகள்.. 


உலகப்புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலையின் மூலம் இலவச ஆன்லைன் படிப்புகள்.. சான்றிதழ் உண்டு.. நீங்களும் படிக்கலாம்! Harvard University Online Courses: அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலமாக இலவச படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு ஹார்வர்டு பல்கலைக்கழக சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது. 

இந்த படிப்பிற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பது பற்றிய விவரங்களை இங்கு பார்க்கலாம். தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில், ஹார்வேர்டு பல்கலைக்கழகம் சுமார் 64 வகையான படிப்புகளை ஆன்லைன் மூலமாக இலவசமாக வழங்குகிறது. இதை படித்து முடித்தவர்களுக்கு சான்றிதழ்களும் உண்டு. 

என்னென்ன படிப்புகள் வழங்கப்படுகிறது? 

கலை மற்றும் வடிவமைப்பு, வணிகம், கம்ப்யூட்டர் சைன்ஸ், டேட்டா சைன்ஸ், கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சி, ஆரோக்கியம் மற்றும் மருந்து, மனிதம், கணிதம், புரோகிராமிங் சைன்ஸ், சமூக அறிவியல் என பல்வேறு துறைகளில் மொத்தம் 64 படிப்புகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு படிப்பிற்கான காலம் மாறுபடுகிறது. ஹார்வேர்டு பல்கலைக்கழக இலவச ஆன்லைன் வகுப்பில் சேர விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், http://online-learning.harvard.edu/ என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? முதலில் http://online-learning.harvard.edu என்ற இணையதள பக்கத்துக்குச் செல்ல வேண்டும் முகப்பு பக்கத்தில் பல்துறைகள் கொடுக்கப்பட்டிருக்கும். 

அதில் உங்களுக்கு விருப்பமான துறையை தெரிவு செய்யவும். இப்போது நீங்கள் தேர்ந்தெடுத்த துறையில் எந்தவிதமான படிப்புகள் உள்ளது என்பது காட்டப்படும் அதில், உங்களுக்குத் தகுந்த படிப்பை தெரிவு செய்ய வேண்டும். நேரம், பயிற்று மொழி பிறவற்றை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் கடைசியாக ‘என்ரோல்’ (Enrol) என்பதை க்ளிக் செய்து, விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு: https://online-learning.harvard.edu/catalog/free 

 38 free Harvard courses you can take online, including the popular CS50 computer science series https://www.businessinsider.com/harvard-free-online-courses Start learning from the world’s best institutions https://www.edx.org

No comments:

Post a Comment