அரசு மேல்நிலைப்பள்ளிகளில்
47 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் 3 ஆண்டுகள் நீட்டிப்பு
அரசாணை வெளியீடு
பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-
2012-13-ம் கல்வியாண்டில் மேல்நிலை கல்வியை மேம்படுத்தும் வகையில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மேல்நிலைப்பிரிவில் உயிர் வேதியியல், நுண் உயிரியல் ஆகிய பாடப்பிரிவுகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித்திறன் மேம்படவும், தரமான மேல்நிலை கல்வியை பெறவும் 16 உயிர் வேதியியல் மற்றும் 31 நுன் உயிரியல் முதுகலை ஆசிரியர் என மொத்தம் 47 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
இந்த பணியிடங்களுக்கு வழங்கப்பட்ட தொடர் நீட்டிப்பு கடந்த ஆகஸ்டு மாதத்துடன் முடிவடைந்து உள்ளதால், வருகிற 2024-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு செய்து ஆணை வழங்குமாறு பள்ளிக்கல்வி ஆணையர் அரசை கேட்டிருந்தார்.
அதனை அரசு கவனமுடன் பரிசீலித்து, மொத்தம் 47 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 1.9.2021 முதல் 31.8.2024 வரை புதிய ஊதிய விகிதம்-18-ன்படி, 3 ஆண்டுகளுக்கு அல்லது தற்காலிக பணியிடங்களுக்கான தேவை குறித்து நிதித்துறையின் மறு ஆய்வில் முடிவு எடுக்கும் வரை இதில் எது முந்தையதோ அதுவரை தொடர் நீட்டிப்பு வழங்கி ஆணையிடுகிறது. மேற்படி தொடர் நீட்டிப்பு வழங்கப்படும் 47 முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் 2 ஆண்டுகளுக்கு மேல் காலிப்பணியிடம் இருப்பின் அதனை அரசின் அனுமதி பெற்று நிரப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment