7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமைச் செயலாளராக நிலை உயர்வு
அரசாணை வௌியீடு
தமிழக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் 1991-ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர்களுக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்து அளித்து உத்தரவிடப்படுகிறது.
அதன்படி, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக தலைவர் பி.கே.ராமச்சந்திரன், பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளர் எஸ்.கோபாலகிருஷ்ணன், எரிசக்தி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ்சந்த் மீனா, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் என்.முருகானந்தம், புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனர் சந்திரகாந்த் காம்ப்ளே, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர் ஆகியோர் முதன்மைச் செயலாளர் அந்தஸ்தில் இருந்து தலைமைச் செயலாளர் அந்தஸ்துக்கு உயர்த்தப்படுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
அவர்கள் தலைமைச் செயலாளர் அந்தஸ்துக்கு உயர்வு பெற்றாலும், அவர்கள் பணி விதிகளின்படி கூடுதல் தலைமைச் செயலாளராக அழைக்கப்படுவார்கள்.
No comments:
Post a Comment