இலந்தை பழம் அடிக்கடி சாப்பிடுவதால் என்ன பலன்கள்...!! - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, December 8, 2021

இலந்தை பழம் அடிக்கடி சாப்பிடுவதால் என்ன பலன்கள்...!!

இலந்தை பழம் அடிக்கடி சாப்பிடுவதால் என்ன பலன்கள்...!! 

இலந்தை பழம் இனிப்பு கலந்த புளிப்பு சுவையுடன் இருக்கும். இதன் காய் பச்சை நிறத்திலும், பழம் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்திலிருக்கும். இப்பழத்தில் கொட்டைப்பகுதியும் அதை சுற்றி சதைப்பகுதியும் இருக்கும். இது மிகவும் சுவை மிகுந்த பழமாகும். 

இம்மரத்தின் வேர், பட்டை மற்றும் கொழுந்து இலைகள் மருத்துவப் பொருட்களாகப் பயன்படுகிறது. இலந்தை பழத்தில் மாவுசத்து, தாது உப்புகள், இரும்புசத்து, ஏ, சி, பி3, பி6 வைட்டமின்களும், தாமிரம், கால்சியம், பொட்டாசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புகளும், கார்போ ஹைட்ரேட் மற்றும் புரதமும் உள்ளது. இலந்தைப்பழம் நினைவாற்றலை அதிகரிக்கும் திறன் கொண்டது. 

இலந்தைப் பழம் கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும். பற்களும் உறுதிபெறும். உடலில் உள்ள பித்தத்தைச் சமநிலைப்படுத்தும் குணம் இலந்தை பழத்துக்கு உண்டு. இலந்தைப் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும். சிலருக்கு அடிக்கடி உடல்வலி, அசதி போன்றவை ஏற்படும். இவர்கள் சிறிது நேரம் வேலை செய்தால் கூட அதிகளவு உடல்வலி தோன்றும். இந்த உடல்வலியைப் போக்கி உடலைத் தெம்பாக்க இலந்தைப் பழம் நல்ல மருந்தாகும்.

No comments:

Post a Comment