தினமும் காலையில் அரை கப் வெண்பூசணிச் சாற்றுடன் அரை கப் தண்ணீர் கலந்து பருகி வருவதால் சோம்பலை நீக்கி புத்துணர்வை கொடுக்கும்.
வெண்பூசணிச்சாற்றுடன் சம அளவு தண்ணீர் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு மூன்று மணி நேரத்திற்கு வேறு எதுவும் சாப்பிடாமல் இருப்பது வயிற்றுப் புண்ணுக்குச் சிறந்த மருந்தென்றும் தொடர்ந்து பல நாட்கள் சாப்பிட வயிற்றுப் புண் முழுமையாகக் குணமாகிவிடுமென்றும் குறிப்பிடுகின்றனர்.
மலச்சிக்கல் குறையும். குறிப்பாக நாடாப் புழுக்களுடன் இதரக் குடற்புழுக்களை வெளியேற்றும்.
கலோரி குறைந்த உணவென்பதால் சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்த உணவு எனப்படுகிறது. கழிவு நீக்கியாகச் செயலாற்றி சிறுநீர் வெளியேற்ற உதவுகிறது.
மாதவிடாய் பிரச்சனைகளை கட்டுப்படுத்தும்.
வெள்ளைப்படுதலை கட்டுப்படுத்தும். உடல் உஷ்ணத்தை குறைக்கும். தூக்கமின்மைக்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. நீர்க்கோர்வை, இருமல், கபம் போன்றவற்றை நீக்கும்.
No comments:
Post a Comment